விக்டோரியா மாநிலத்தில் இன்று திங்கள் மதியம் முதல் பாடசாலைகள், வழிபாட்டுத்தலங்கள், திரையரங்குகள், உள்ளக விளையாட்டு அரங்குகள், பொழுதுபோக்கு மையங்கள், pubs, clubs, nightclubs, Crown Casino போன்றவை மூடப்படுவதாக மாநில Premier Daniel Andrews அறிவித்தார்.
உணவகங்களில் அமர்ந்து உண்பதற்கு தடை விதிக்கப்படும் அதேநேரம் take-away மற்றும் home delivery விற்பனைக்கு மட்டும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
திருமண நிகழ்வுகள் மற்றும் இறுதிநிகழ்வுகளுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் 14 நாட்கள் self-isolation-தனிமைப்படுத்தல் சட்டத்தை கடைப்பிடிக்கிறார்களா எனவும் உன்னிப்பாக அவதானிக்கப்படுகிறது.
இத்தகைய நடவடிக்கைகளுக்கென விக்டோரியா மாநிலம் முழுவதும் சுமார் 500 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக Premier Daniel Andrews தெரிவித்தார்.
பாடசாலை விடுமுறை எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பமாவதற்குப் பதிலாக செவ்வாய்க்கிழமையே விடுமுறை ஆரம்பமாவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதேநேரம் பல்பொருள் அங்காடிகள், எரிபொருள் நிரப்பு நிலையங்கள், மருந்தகங்கள், வங்கிகள், பலசரக்கு கடைகள், home delivery, freight மற்றும் logistics உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் அனைத்தும் தொடர்ந்தும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விக்டோரிய மாநிலத்தில் அடுத்த 3 வாரங்களுக்கு இந்நிலை நீடிக்கும் எனவும் கொரோனா பரவலின் தீவிரத்தைப்பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படும் எனவும் குறிப்பிடப்படுகிறது.
Stage-1 shutdown என வகைப்படுத்தப்பட்டுள்ள இந்நடைமுறையை விக்டோரிய மாநிலத்தவர்கள் சரியான முறையில் கடைப்பிடிக்க வேண்டுமெனவும் நல்ல சுகாதார பழக்கவழக்கங்களைத் தொடர்ந்தும் கடைப்பிடிப்பதுடன் ஒவ்வொருவரும் தமக்கிடையில் 1.5 மீட்டர் பாதுகாப்பு இடைவெளியை பேணவேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
விக்டோரியா மாநிலத்தில் இதுவரை 355 பேருக்கு மேல் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share
