கோவிட் கட்டுப்பாடுகளினால் பாதிப்புக்குள்ளான உணவகங்கள் மற்றும் சுற்றுலாத்துறை மீண்டும் தங்கள் வியாபாரத்தில் முன்னேற்றமடைய ஊக்குவிக்கும்வகையில், நியூ சவுத் வேல்ஸ் மக்களுக்கு மாநில அரசு அறிவித்த நூறு டொலர்கள் இலவச கூப்பன் வழங்கும் திட்டம் இன்னும் சில தினங்களில் பரீட்சிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்திலுள்ள 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தலா 25 டொலர் பெறுமதியான 2 இலவச உணவுக் கூப்பன்கள் மற்றும் தலா 25 டொலர் பெறுமதியான 2 பொழுதுபோக்கு தொடர்பான கூப்பன்களை வழங்கப்போவதாக அறிவித்துள்ள நியூ சவுத் வேல்ஸ் அரசு, இதற்காக சுமார் 50 கோடி டொலர்களை ஒதுக்கீடு செய்திருக்கிறது.
முதல் கட்டமாக The Rocks மற்றும் Broken Hill பகுதியில் invitation only அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மாத்திரம் பரீட்சிக்கப்படவுள்ள இந்த இலவச கூப்பன்கள், அடுத்த மாதமளவில் மாநிலத்தின் ஏனைய பகுதிகளிலுள்ள - கோவிட் கட்டுப்பாட்டினால் பாதிக்கப்பட்ட - இடங்களுக்கும் நடைமுறைப்படுத்தப்படும்.
இந்தக்கூப்பனை பெற்றுக்கொள்வது மற்றும் அதன் மேலதிக நடைமுறைகள் குறித்து கீழுள்ள இணைப்பில் விவரங்களை அறிந்துகொள்ளலாம். https://www.service.nsw.gov.au/campaign/dine-discover-nsw
Share
