SKIP TO MAIN CONTENT

சிட்னி - பெங்களூர் நேரடி விமான சேவை ஆரம்பமாகிறது!

ஆஸ்திரேலியாவுக்கும் தென்னிந்திய நகரொன்றுக்குமான முதல் நேரடி விமான சேவை எதிர்வரும் செப்டெம்பர் 14 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

travel
India's Bangalore city and Sydney will be connected by a new direct route from Qantas. Source: (AAP Image/Con Chronis)

2 min read

Published

Updated


Skip to article content

இந்தியாவின் தொழில்நுட்பத் தலைநகர் என்று அழைக்கப்படும் பெங்களூருக்கும் சிட்னிக்கும் இடையிலான இந்த விமான சேவையை ஆஸ்திரேலியாவின் பிரபல விமான சேவையான Qantas ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

ஆரம்பமாகவுள்ள இந்தப் புதிய சேவை, ஆஸ்திரேலியாவுக்கும் பெங்களூருக்குமான தற்போதைய விமானப் பயண நேரத்திலும் பார்க்க மூன்று மணி நேரம் குறைவானது என்றும், பெங்களூருக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான நெருக்கமான தொடர்புகள் இந்த விமான சேவையினால் மேலும் வலுப்பெறும் என்றும் Qantas தெரிவித்துள்ளது.

இந்தப் புதிய விமான சேவையை மேற்கொள்ளவுள்ள Airbus A330 விமானம், வாரத்துக்கு நான்கு தடவைகள் பெங்களூருக்கும் சிட்னிக்கும் இடையில் பறப்பில் ஈடுபடும் என்றும் - இதேவேளை சிட்னிக்கும் டில்லிக்கும் இடையில் நடைபெறுகின்ற நேரடி விமான சேவை தொடர்ச்சியாக தனது பணியை மேற்கொள்ளும் என்றும் Qantas தெரிவித்துள்ளது.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள்.  கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now