SKIP TO MAIN CONTENT

வேக கணிப்பு கமரா முன்னெச்சரிக்கை அறிவிப்பு பலகைகள் அகற்றப்படலாம்

Speed Camera Warning sign
Source: Public Domain

1 min read

Published

Updated

By Selvi



Skip to article content

N.S.W மாநிலத்தில் வீதிகளில் வேக கணிப்பு கமரா (speed camera) பொருத்தப்பட்டுள்ள இடங்களில் வேக கணிப்பு கமரா இவ்விடத்தில் அல்லது சிறிது தூரத்தில் உள்ளது என்ற முன்னெச்சரிக்கை

அறிவிப்பு பலகைகள் காணப்படுவதனால், வாகனம் ஓட்டுபவர்கள் அதனை பார்த்த உடன் தங்களின் வேகத்தை குறைக்கிறார்களே தவிர எப்பொழுதும் சரியான வேகத்தில் வாகனத்தை ஓட்ட வேண்டும் என்ற பொறுப்பை உணர்வது இல்லை என்றும் ஆகவே இம்முன்னெச்சரிக்கை அறிவிப்பு பலகை வீதி பாதுகாப்பிற்கு எதிர்மறை தாக்கத்தையே ஏற்படுத்துகிறது என்று N.S.W Auditor-General வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கை கூறுகிறது.

வீதி பாதுகாப்பினை உண்மையில் உயர்த்த வேண்டுமாயின் வேக கணிப்பு கமரா இங்கு உள்ளது என்ற முன்னெச்சரிக்கை அறிவிப்பு பலகைகள் அகற்றப்பட வேண்டும். இதனால் எங்கு வேக கணிப்பு கமராகள் உள்ளன என்பது தெரியாமல் அதிக வேகத்திற்கான அபராதம் வந்துவிடுமோ என்ற பயத்தில் எப்பொழுதும் சரியான வேகத்தில் வாகனத்தை ஓட்டுபவர்கள் ஓட்ட முயற்சி செய்வர் என்று அவ்வறிக்கை பரிந்துரைத்துள்ளது.

ஆனால் வேக கணிப்பு கமரா முன்னெச்சரிக்கை அறிவிப்பு பலகைகளை உடனே அகற்றும் எண்ணம் தற்போது இல்லை என்று அரசு தெரிவித்துள்ளது 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now