SKIP TO MAIN CONTENT

'Brisbane' வைரஸிலிருந்து பாதுகாத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தல்!

A person getting the flu vaccine.
Source: AAP

1 min read

Published

Updated

Presented by Renuka



Skip to article content

நாட்டில் குளிர் காலம் ஆரம்பிக்கவுள்ளநிலையில், எதிர்வரும் மே மாதத்திற்கு முன்பாக அனைவரும் Flu தடுப்பூசி போட்டுக்கொள்வது முக்கியம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

கடந்த ஆண்டு மிகமோசமான முறையில் Flu பலரையும் தாக்கியிருந்த பின்னணியில், இதன் தாக்குதலிலிருந்து தப்பிப்பதற்கு தடுப்பூசி அவசியமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

உலக சுகாதார மையத்தின் அறிவுறுத்தலின் பேரில், உலகின் மோசமான வைரஸ்களில் ஒன்றான 'Brisbane Virus'–க்கெதிரான பாதுகாப்பும், இவ்வருடம் வழங்கப்படும் Flu தடுப்பூசியில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய மருத்துவ மையம் தெரிவித்துள்ளது.

ஆபத்தான இந்த 'Brisbane' வைரஸ், குயின்ஸ்லாந்து தலைநகர் பிரிஸ்பேர்னில் முதல்தடவையாக இனங்காணப்பட்டதையடுத்து இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.

வைரஸானது புதுப்பித்துக்கொள்ளும் சக்தி வாய்ந்தது என்பதால் ஏனைய தடுப்பூசிகளைப் போலல்லாமல் Flu தடுப்பூசி ஒவ்வொரு வருடமும் போடப்பட வேண்டும்.

நான் மட்டும் தடுப்பூசி போட்டுக்கொள்வதால் என்ன பயன் என்று நினைக்காமல், நாம் ஒவ்வொருவரும் தடுப்பூசியை போடுவதன் மூலம் சமூகத்தில் Flu பரவுவதற்கான சந்தர்ப்பங்களைக் குறைக்க முயற்சிக்கலாம் என ஆஸ்திரேலிய தொற்றுநோய்த்தடுப்பு மையம் வலியுறுத்தியுள்ளது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now