சிட்னி Opera House-க்கு அண்மையில் அமைந்துள்ள உணவகங்களுக்கு வருகைதரும் வாடிக்கையாளர்களுக்கு தொந்தரவு செய்யும் வகையில் பறந்து திரியும் Seagulls எனப்படும் கடற்புறாக்களை கலைப்பதற்கு, வருடத்துக்கு 200,000 டொலர்கள் செலவில் சில நாய்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் Mad Dogs And Englishmen நிறுவனத்தை நாடிய நியூ சவுத் வேல்ஸ் அரசு, இரண்டு வருடத்துக்கு கிட்டத்தட்ட 400,000 டொலர்கள் பெறுமதியான ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டது என்று The Daily Telegraph செய்தி வெளியிட்டுள்ளது.
நாளொன்று நான்கு மணி நேரத்துக்கு சுழற்சி முறையில் வேலைசெய்யும் சில நாய்கள், உணவகங்களை அண்டிய பகுதிகளில் சுமுகமான சூழ்நிலையை உறுதி செய்கின்றன என்றும், வலைகள் மற்றும் இயந்திரங்களின் உதவியுடன் Seagulls-ஐ கலைப்பதற்கு மேற்கொண்ட முன்னைய முயற்சிகளைவிட, நாய்களின் பணி நேர்த்தியாக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
"இரண்டு மூன்று வறுத்த உருளைக்கிழங்கு சீவல்களைத் திருடுவதற்கு வருகின்ற பறவைகளைக் கலைப்பதற்கு, இத்தனை ஆயிரம் டொலர்கள் மக்களின் வரிப்பணத்தை செலவு செய்வது நியூ சவுத் வேல்ஸ் அரசின் தான்தோன்றித்தனத்தையே காண்பிக்கிறது" - என்று நியூ சவுத் வேல்ஸ் மாநில எதிர்கட்சியின் Walt Secord தெரிவித்துள்ளார்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
