தீவிரமான கொரோனா வைரஸ் பரவலை அடுத்து வீட்டிலிருந்து வேலைசெய்வதற்கு பல பணியிடங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
ஆனால், இவ்வாறான ஏற்பாடு குடும்பவன்முறைகளை (domestic violence) அதிகரிக்கும் வாய்ப்புக்களை கொண்டுள்ளதால் இதுவிடயத்தில் அரசாங்கம் தீவிர அவதானிப்புக்களையும் பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்புக்களையும் உறுதிசெய்யவேண்டும் என்று பெண்கள் நல அமைப்புகள் அச்சமும் கவலையும் தெரிவித்துள்ளன.
வீட்டிலிருந்து வேலை மட்டுமல்லாமல் தம்மைத்தாம் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்க வேண்டிய நிலை எழும்போது கணவன்மாரின் கொடுமைக்கு ஆளாகும் பெண்கள் அதிலிருந்து வெளிவருவதற்கு தற்போதைய சூழல் தடையாக இருக்கக்கூடும் எனவும் இவ்வமைப்புகள் கவலை வெளியிட்டுள்ளன.
வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான ஏற்பாடு அறிவிக்கப்பட்டபோது சீனாவில் இவ்வாறு குடும்ப வன்முறைகள் அசுர கதியில் அதிகரித்திருந்தன. ஏற்கனவே இன்னொரு பிரச்சினை இடம்பெற்றுவரும்போது, இந்தப்பிரச்சினையை யாரும் கண்டுகொள்ளாமல் விடுவதற்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளன. சமூக ரீதியில் தனிமைப்படுத்தப்படும்போது இவ்வாறான வன்முறை சூழலை நோக்கி மனிதர்கள் தள்ளப்படுவது இயல்பானதாகவே கருதப்படுகிறது. அமெரிக்காவில் இந்த நிலைமை ஏற்கனவே அதிகரித்துவிட்டது - என்றும் மேற்படி அமைப்புகள் அச்சம் தெரிவித்துள்ளன.
Share
