SKIP TO MAIN CONTENT

கொரோனா: நிதிநெருக்கடியிலுள்ள பெண்களை பாலியல் தேவைக்கு அழைக்கும் நம்மவர்கள்!

Representative image of young women receiving sexual propositions on social media
Representative image of young women receiving sexual propositions on social media Source: Getty

2 min read

Published

Updated

Source: SBS Punjabi


Skip to article content

கொரோனா பரவல் நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் காரணமாக மிக மோசமாகப் பாதிக்கப்பட்டவர்களில் இங்குள்ள வெளிநாட்டு மாணவர்களும் அடக்கம்.

பலர் வேலைவாய்ப்புக்களை இழந்துள்ள அதேநேரம் மேலும் பலரது வேலை நேரங்கள் குறைக்கப்பட்டுள்ளன.

அரச கொடுப்பனவுகளைப் பெறத்தகுதியற்ற நிலையிலுள்ள வெளிநாட்டு மாணவர்கள் மீண்டும் தமது சொந்தநாடுகளுக்குத் திரும்புவதிலும் பல சிக்கல்கள் உள்ளதால் வாழ்க்கைச் செலவு, வாடகை, கல்விச்செலவு என பலவழிகளில் நிதிநெருக்கடியை எதிர்கொள்கின்றனர்.

இந்நிலையில் கொரோனா பரவலால் பாதிக்கப்பட்டுள்ள தமக்கு உதவி வழங்குமாறு சமூக வலைத்தளங்களில் பதிவிடும் இந்தியப் பின்னணிகொண்ட வெளிநாட்டு மாணவிகளை பாலியல் தேவைக்காகப் பயன்படுத்த சில ஆண்கள் முற்படுவதாகவும், இவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியப் பின்னணி கொண்டவர்கள் எனவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்புக் கோரி அல்லது ஏதேனும் பொருட்களை விற்பனைசெய்து பணமீட்ட முற்படும்  மாணவிகளின் சமூகவலைத்தள பதிவுகளைப் பார்வையிட்டபின் அவர்களைத் தொடர்புகொள்ளும் ஆண்கள், தாம் அவர்களுக்கு உதவ தயாராக இருப்பதாகவும், பதிலுக்கு தம்முடன் dating வர முடியுமா என்று அழைப்பதாகவும், இன்னும் சிலர் தமக்கு massage தரமுடியுமா என்று அழைப்பதாகவும் இந்திய மாணவிகள் சிலர் முறையிட்டுள்ளனர்.

Message received by Sonia*
Message received by Sonia* Source: Supplied
More solicitations received by Pooja
message received by Pooja* Source: Supplied

இன்னும் சில ஆண்கள் ஒருபடி மேலேசென்று தம்முடன் பாலுறவு வைத்துக்கொள்ள முடியுமா என்று கேட்பதாகக் கூறியுள்ள இம்மாணவிகள், தம்மைத் தொடர்புகொள்ளும் பெரும்பாலான இந்தியப் பின்னணி கொண்ட ஆண்கள் திருமணமானவர்கள் என குறிப்பிட்டுள்ளனர்.

Message received by Sonia* from the man she took a short term loan from
Message received by Sonia* Source: Supplied

ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு உதவிசெய்வதற்குப் பதிலாக அவர்களைப் பாலியல் தேவைக்குப் பயன்படுத்த முற்படும் சில ஆண்களால் ஆஸ்திரேலியாவிலுள்ள ஒட்டுமொத்த இந்திய சமூகத்திற்கே அவமானம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள சில மகளிர் செயற்பாட்டாளர்கள், தாம் சார்ந்திருக்கும் அமைப்புகள் ஊடாக குறித்த மாணவிகளுக்கான உதவிகளை வழங்கியுள்ளனர்.

இம்மாணவிகள் உடல்ரீதியாக எவ்வித துன்புறுத்தல்களையும் அனுபவிக்காதபோதிலும் மனதளவில் அவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள மகளிர் செயற்பாட்டாளர்கள், இவ்வாறான பாலியல் சீண்டல்களை எதிர்கொள்ளும் பெண்கள் உடனடியாக அதை வெளிப்படுத்தி, உதவிபெறுமாறு வலியுறுத்தியுள்ளனர்.

If you are a victim of sexual harassment, please call 1800 RESPECT or 1800 737 732. This is a free call, from anywhere within Australia and if you can't speak English fluently, an interpreter can be arranged. In case of emergency, please call 000


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now