கிறிஸ்மஸ் புதுவருட விடுமுறைக் காலத்தையொட்டி நியூ சவுத் வேல்ஸ் மற்றும் ACT மாநிலங்களில் வீதி விதிமுறைகளை மீறுவோருக்கான தண்டனை அதிகரிக்கப்படுகிறது.
இதன்படி இன்று 20ம் திகதி வெள்ளிக்கிழமை முதல் ஜனவரி 1ம் திகதி வரை வீதி விதிமுறைகளை மீறுவோர் double-demerit points தண்டனை பெறுவர்.
அதிவேகமாக செல்லுதல், Seatbelt-ஆசனப்பட்டி அணியாமை, கைபேசி பாவனை, ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டுதல் உள்ளிட்ட குற்றங்களுக்காக இந்த தண்டனை விதிக்கப்படுகின்றது.
School zone-பள்ளி வலயங்களில் வீதி விதிமுறைகளை மீறுவோர் double-demerit points-க்கு மேலதிகமாக இன்னுமொரு demerit point-ஐ இழக்க நேரிடும்.
வீதி விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் double-demerit points-உடன் சேர்த்து பெருந்தொகை பணத்தினையும் அபராதமாக செலுத்த நேரிடும்.
இதேவேளை மேற்கு ஆஸ்திரேலியாவில் double-demerit points தண்டனை இன்று முதல் ஜனவரி 5 வரை நடைமுறையில் இருக்கும்.
குயின்ஸ்லாந்து மாநிலத்தில் பண்டிகைக்காலத்திற்கென்று சிறப்பாக double-demerit points தண்டனை நடைமுறைப்படுத்தப்படுவதில்லை.
விக்டோரியா, தெற்கு ஆஸ்திரேலியா, டஸ்மேனியா மற்றும் ஆகிய மாநிலங்களில் double-demerit points தண்டனை நடைமுறையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
