எதிர்வரும் கிறிஸ்மஸ் புதுவருட விடுமுறைக் காலத்தையொட்டி நியூ சவுத் வேல்ஸ் மற்றும் ACT மாநிலங்களில் வீதி விதிமுறைகளை மீறுவோருக்கான தண்டனை அதிகரிக்கப்படுகிறது.
இதன்படி எதிர்வரும் 21ம் திகதி வெள்ளிக்கிழமை முதல் ஜனவரி 1ம் திகதி செவ்வாய்க்கிழமை வரை வீதி விதிமுறைகளை மீறுவோர் double-demerit points தண்டனை பெறுவர்.
அதிவேகமாக செல்லுதல், Seatbelt-ஆசனப்பட்டி அணியாமை, கைபேசி பாவனை, ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டுதல் உள்ளிட்ட குற்றங்களுக்காக இந்த தண்டனை விதிக்கப்படுகின்றது.
21ம் திகதி வெள்ளிக்கிழமை நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தில் பாடசாலை நாள் என்பதால் school zone-பள்ளி வலயங்களில் வீதி விதிமுறைகளை மீறுவோர் double-demerit points-க்கு மேலதிகமாக இன்னுமொரு demerit point-ஐ இழக்க நேரிடும்.
இதேவேளை வீதி விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் double-demerit points-உடன் சேர்த்து பெருந்தொகை பணத்தினையும் அபராதமாக செலுத்த நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
Share
