SKIP TO MAIN CONTENT

உங்களது இந்த நட்பான சைகை $362 அபராதத்திற்கு வழிவகுக்கலாம்!

வாகனம் ஓட்டும்போது நீங்கள் மேற்கொள்ளும் இந்த சிறிய செயற்பாடு உங்களுக்கு $362 அபராதத்திற்கும் மூன்று demerit pointsக்கும் வழிகோலலாம்.

Happy businessman driving a car and waving to someone.
Young happy businessman waving to someone while driving a car. Credit: skynesher/Getty Images

1 min read

Published

Updated

By Renuka

Source: SBS


Skip to article content

ஆஸ்திரேலிய ஓட்டுநர்கள் அதிகம் அறியப்படாத சாலை விதிகள் குறித்து எச்சரிக்கப்படுகிறார்கள்.

கார் ஜன்னல் வழியாக கையை வெளியே கொண்டு சென்று நண்பர்களை நோக்கி கை அசைப்பது, வெளியே மழை பெய்தால் உங்கள் கைகளை வெளியே நீட்டி மழையை உணர்வது அல்லது வாகனம் ஓட்டும் போது ஜன்னல் ஓரத்தில் உங்கள் முழங்கையை ஊன்றுவது போன்றவை, வாகனத்திலிருந்து உங்களது உடற்பாகம் ஒன்று வெளியே நீண்டுகொண்டிருப்பதாக கருதப்படலாம்.

இதற்காக குறித்த ஓட்டுநர்களுக்கு $362 அபராதம் மற்றும் மூன்று demerit points தண்டனையாக விதிக்கப்படலாம்.

இது சாலை விதி 268 (3) இன் கீழ் வருகிறது: அதாவது ஒரு நபர் வாகனத்தில் செல்லும்போது, அவ்வாகனத்தின் ஜன்னல் அல்லது கதவுக்கு வெளியே அவரது உடலின் எந்தப் பாகமும் வெளியில் இருக்கும்வகையில் பயணிக்கக்கூடாது.

அதேநேரம் தனது வாகனத்தை வலதுபுறம் திருப்புவதற்காக கை மூலம் சமிக்ஞை காட்டுவது, அல்லது வாகனத்தின் வேகத்தைக் குறைப்பதற்கு அல்லது நிறுத்துவதற்கு கைகளை வெளியே நீட்டி சமிக்ஞை வழங்குவதும் விதிமீறலாக கருதப்படும்.

ஆஸ்திரேலிய ஓட்டுநர்கள் பலர் தமது நட்பின் அடையாளத்தை வெளிப்படுத்துவதற்காக அப்பாவித்தனமாக கைகளை வெளியே நீட்டி சைகை செய்வது, அவர்களுக்கு மிகப்பெரிய அபராதங்களைக் கொண்டுவரும் என்பதால் இதுதொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறு வலியுறுத்தப்படுகிறது.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in  

பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில்

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now