SKIP TO MAIN CONTENT

Dutton-ஐ தோற்கடித்து பதவியை தக்கவைத்துக்கொண்டார் Turnbull!

Waziri Mkuu Malcolm Turnbull na waziri wazamani wa maswala ya nyumbani Peter Dutton
Waziri Mkuu Malcolm Turnbull na waziri wazamani wa maswala ya nyumbani Peter Dutton walipo zungumza na vyombo vya habari Source: AAP

1 min read

Published

Updated

Presented by Renuka


Skip to article content

பிரதமர் Malcolm Turnbull-க்கும் உள்துறை அமைச்சர் Peter Dutton-க்கும் இடையில் நடைபெற்ற தலைமைத்துவப் போட்டியில் Malcolm Turnbull 13 வாக்குகளால் வெற்றிபெற்றார்.

National Energy Guarantee என்ற தேசிய எரிசக்தி உத்தரவாத திட்டத்தில் ஆளுங்கட்சி அங்கத்தவர்களின் ஒருமித்த ஆரதவைப்பெறுவதில் Malcolm Turnbull தோல்விடைந்திருந்தநிலையில் அவரது தலைமைத்துவத்திற்கு உள்துறை அமைச்சர் Peter Dutton சவால் விடுக்கக்கூடும் என செய்திகள் பரவலாக வெளிவந்திருந்திருந்தன.

இந்தப் பின்னணியில் இன்று காலை பிரதமர் தலைமையில் லிபரல் கட்சியின் உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெற்றபோது, பிரதமர் Malcolm Turnbull தமது பதவி காலியாக உள்ளதாகவும் அதற்கு சவால்விடுக்க விரும்புபவர்கள் அதனை தற்போது செய்யலாம் என அறைகூவல் விடுத்திருந்ததாகவும் இச்சவாலை உள்துறை அமைச்சர் Peter Dutton மாத்திரம் ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தொடர்ந்து புதிய தலைமைத்துவத்திற்காக நடைபெற்ற வாக்கெடுப்பில் 48-35 என்ற அடிப்படையில் 13 வாக்குகளால் பிரதமர் Malcolm Turnbull வெற்றிபெற்று பிரதமர் பதவியைத் தக்கவைத்துக்கொண்டுள்ளார்.

தலைமைத்துவ சவாலில் தோல்வியடைந்ததையடுத்து தனது உள்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ள Peter Dutton இனிமேல் சாதாரண backbench நாடாளுமன்ற உறுப்பினராக கடமையாற்றுவார்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now