ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக குடியேற அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையை, வருடமொன்றிற்கு 20 ஆயிரத்தால் குறைப்பதற்கு தாம் ஆலோசனை வழங்கியதாக, Home Affairs அமைச்சர் Peter Dutton தெரிவித்துள்ளார்.
தற்போது வருடமொன்றிற்கு 190,000 பேர் ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக குடியேற அனுமதிக்கப்படும் நிலையில், அதனை 170,000 ஆக குறைப்பதற்கு, கடந்த வருடம் தாம் பரிந்துரை செய்திருந்ததாக Peter Dutton கூறியுள்ளார்.
எனினும் அவரது இந்தப் பரிந்துரை, பிரதமர் Malcolm Turnbull மற்றும் கருவூலக் காப்பாளர்-Treasurer Scott Morrison ஆகியோரால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தற்போது இருக்கும் எண்ணிக்கையைத் தொடர்வதில் தமக்கு உடன்பாடு என்றபோதிலும், குடிவரவு உள்ளிட்ட விடயங்களில் இப்படியான மாற்றங்களைப் பரிந்துரைப்பது தமது பணிகளில் ஒன்று என Peter Dutton தெரிவித்துள்ளார்.
Share
