நாட்டில் பெற்றோல் விலை அதிகரித்துச்செல்லும் பின்னணியில் இதனைச் சமாளிப்பதற்கான வழிகளில் ஒன்றாக பலரும் E10 பெற்றோலைப் பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கலாம்.
அல்லது நம்மில் பலர் E10 பெற்றோலை பலகாலமாக பயன்படுத்தி வரலாம்.
ஒருவர் சாதாரண unleaded பெற்றோலுக்கு பதிலாக E10 பெற்றோலைப் பயன்படுத்துவதன் மூலம் லீட்டருக்கு 4 சதங்களோ அல்லது அதற்கும் கூடுதலாக மீதப்படுத்தலாம்.
ஆனால் E10 பெற்றோலின் வினைத்திறன் unleaded பெற்றோலைவிட குறைவு என்பதால், unleaded பெற்றோலை பயன்படுத்தி செல்லும் அதேயளவு தூரத்திற்கு E10 பெற்றோலை பயன்படுத்தி செல்ல முடியாது என குறிப்பிடப்படுகிறது.
எனவே பணத்தை மீதப்படுத்துவதாக நினைத்து E10 பெற்றோலை கொள்வனவு செய்தாலும் அது சீக்கிரமே தீர்ந்து விடுவதால் மீண்டும் பணம் செலுத்தி E10 பெற்றோலை நிரப்பிக் கொள்வதும் unleaded பெற்றோலை பயன்படுத்துவதும் ஒன்றுதான் என குறிப்பிடப்படுகிறது.
E10 பெற்றோலுக்கும் unleaded பெற்றோலுக்கும் இடையிலான விலையில் மிக அதிகளவு வித்தியாசம் இருக்கும்பட்சத்தில் மட்டுமே E10 பெற்றோலைப் பயன்படுத்துவதால் பணத்தை மீதப்படுத்த முடியுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
