SKIP TO MAIN CONTENT

மெல்பேர்ன் நகரில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சித்த 26 வயது நபர் கைது!

A Victorian police bomb squad technician approaches the car, following the arrest.
یک تکنسین پولیس ویکتوریا از واحد ضدبمب در حال نزدیک شدن به واسطه نقلیه، پس از بازداشت راننده آن. Source: Twitter

1 min read

Published

Updated


Skip to article content

மெல்பேர்ன் நகரில் இன்று பிற்பகல் நபர் ஒருவர் குழப்பம் விளைவிக்க முற்பட்டதையடுத்து பொலீஸாரினால் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

நகரின் மத்தியில் வாகனத்தில் சென்று வட்டமடித்து குழப்பத்தை ஏற்படுத்த முயற்சித்த நபரினால் பதற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து உடனடியாக அங்கு விரைந்த பொலீஸார் குறிப்பிட்ட நபரை கைது செய்து நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இந்தச்சம்பவம் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் நகரின் மத்தியில் Flinders - Williams வீதி சந்தியில் இடம்பெற்றது. குழப்பத்தை ஏற்படுத்த முயற்சித்த 26 வயது நபர் பொலீஸார் கைதுசெய்யப்பட்டு தற்போது விசாரிக்கப்பட்டுவருகிறார்.

குறிப்பிட்ட நபர் காரில் வட்டமடித்துவிட்டு, வெளியில் வந்து காரின் கூரையின் மீது ஏறியிருந்து, தன்னை வந்து கைதுசெய்யுமாறு பொலீஸாரை கூவி அழைத்துள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு இதேபோன்று மெல்பேர்ன் நகரின் மத்தியில் இடம்பெற்ற இருவேறு சம்பவங்களில் பலர் கொல்லப்பட்ட நினைவுகளால், இன்றைய சம்பவம் நகரில் பலத்த பதற்றத்தை ஏற்படுத்தியது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now