SKIP TO MAIN CONTENT

எச்சரிக்கை: எரிசக்தி நிறுவனங்களின் பெயரால் மோசடி!

AGL power bill
Source: SBS

1 min read

Published


Skip to article content

மின்சார கட்டணத்துக்கான பற்றுச்சீட்டு என்ற பெயரில் மோசடிக்காரர்கள் அனுப்பும் மின்னஞ்சல்கள் தொடர்பில் வாடிக்கையாளர்களை எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

AGL என்ற எரிசக்தி நிறுவனத்தின் பெயரில் “AGL electricity bill” என்ற தலைப்புடன் வரும் போலி மின்னஞ்சல்களிலிருக்கும் இணைப்புகளைத் திறக்க வேண்டாம் என நியூ சவுத் வேல்ஸ் பொலிஸாரும் AGL நிறுவனமும் அறிவுறுத்தியுள்ளன.

குறித்த மின்னஞ்சல் agl@energy.agl.com.au என்ற முகவரியிலிருந்து வந்திருந்தால் மாத்திரமே அது உண்மையானது எனக்கருத வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மோசடிக்காரர்களினால் அனுப்பப்பட போலி மின்னஞ்சல்களின் ஊடாக தமது தனிப்பட்ட விபரங்களைச் சமர்ப்பித்தவர்கள் உடனடியாக AGL இணையகணக்கிற்குச் சென்று தமது கடவுச்சொல்லை மாற்றுமாறு கோரப்பட்டுள்ளனர். அத்துடன் குறித்த மின்னஞ்சலை அழித்துவிட்டு கணிணியில் anti-virus scan செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now