SKIP TO MAIN CONTENT

ஏழு கிளைகளை மூடுகிறது The Reject Shop!

The Reject Shop
The Reject Shop has warned of a likely loss for the 2019 financial year. (AAP) Source: AAP

1 min read

Published

Updated

Presented by Renuka


Skip to article content

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மலிவு விற்பனை அங்காடியான The Reject Shop நாடெங்கிலுமுள்ள தனது ஏழு கிளைகளை மூடவுள்ளதாக அறிவித்துள்ளது.

1980 ஆண்டு மெல்பேர்னில் ஒரே ஒரு கடையாக ஆரம்பிக்கப்பட்ட The Reject Shop படிப்படியாக முன்னேறி நாடெங்கிலும் பல கிளைகளைத்திறந்து இன்றைய நிலையில் ஆஸ்திரேலிய முழுவதும் 357 கிளைகள் உள்ளன.

இவற்றில் ஏழு கிளைகள் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளபோதும் அவை எந்த மாநிலத்தில் இடம்பெறப்போகின்றன என்பது குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

The Reject Shop நாடெங்கிலுமுள்ள கடைகளுக்கு செலுத்திவரும் வாடகை மற்றும் இதர செலவுகள் ஆகியவை தமது நிறுவனத்துக்கு எதிர்காலத்தில் 20 லட்சம் டொலர் நட்டத்தை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்பட்டதை அடுத்தே இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரியவருகிறது.

The Reject Shop நிறுவனத்தின் இந்த அறிவிப்பையடுத்து அதன் நிறைவேற்றுப்பணிப்பாளர் Ross Sudano தனது பணியிலிருந்து விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now