எல்லைப்பாதுகாப்பு மற்றும் குடிவரவுக்கொள்கைகளில் மாற்றம் ஆகியவற்றின் அடிப்படையில் அமெரிக்கர்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு பயணம் செய்வது தொடர்பில் புதிய விசா நடைமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறையின் பிரகாரம், அமெரிக்கர்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு பயணிப்பதற்கு இனி விசாவுக்கு விண்ணப்பிக்கவேண்டும் என்றும் அங்கீகரிக்கப்படும் விண்ணப்பதாரிகளுக்கு மூன்று வருட விசா வழக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை எதிர்வரும் 2021 ஆம் ஆண்டுமுதல் அமுலுக்கு வரப்போவதாக ஐரோப்பிய நாடுகளுக்கான பயண விவகாரங்களுக்கான அதிகார சபை (European Travel Information and Authorization System) தெரிவித்துள்ளது.
அமெரிக்கர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செய்யும் தற்போதைய நடைமுறையின் பிரகாரம், விசா அனுமதி எதுவுமின்றி மூன்று மாதங்களுக்கு வந்து போகலாம். ஆனால், புதிய நடைமுறையின் கீழ் அங்கீகரிக்கப்படும் மூன்று வருட விசா பெறுனர்கள் அந்தக்காலப்பகுதியில் எத்தனை தடவைகளும் வந்து போகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் எல்லைப்பாதுகாப்பினை உறுதிசெய்யும் வகையில் ஒன்றியத்தினால் அமைக்கப்பட்டுள்ள புதிய நிர்வாக அலகினாலேயே *(European Travel Information and Authorization System) இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
