SKIP TO MAIN CONTENT

எழுநூறுக்கும் மேற்பட்ட விக்டோரிய ஆசிரியர்கள்"முறைகேடான நடத்தை " - விசாரணையில் தகவல்!

child abuse (The image is for representation only)
child abuse (The image is for representation only) Source: AAP

1 min read

Published

Updated


Skip to article content

பாடசாலையில் முறைகேடாக நடந்துகொண்ட எழுநூறுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள்- விக்டோரியாவின் ஆசிரியர் அவதானிப்புக்குழுவினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்த விசாரணைகளின் அடிப்படையில் பத்துப்பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்..

இதுதவிர மேலும் 19 ஆசிரியர்கள்- மாணவர்களுடனான பாலியல் தொடர்பு மற்றும் போதைப்பொருள் பாவனை போன்ற குற்றச்சாட்டுகளின் பொருட்டு விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர் என்றும், குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட ஆசிரியர்களின் விவரங்கள் பொலீஸாரிடம் சமர்ப்பிக்கட்டதையடுத்து குற்றவியல் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 18 மாதங்களுக்கு முன்னர் 150 சம்பவங்களாக இருந்த ஆசிரியர்களின் துர்நடத்தைகள் 2019 ஜூன் மாதம் வரையான கணக்கெடுப்பில் எழுநூறை தாண்டியுள்ளது என்று விக்டோரிய ஆசிரியர்கள் அமைப்பு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now