தமிழகத்தின் பிரபல எழுத்தாளரும் சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான தோப்பில் முகமது மீரான் இன்று காலமானார். அவருக்கு வயது 75.
கன்னியாகுமரி மாவாட்டம் தேய்ங்காய் பட்டினத்தில் 1944 ஆம் ஆண்டு பிறந்த இவர், ஒரு கடலோர கிராமத்தின் கதை, துறைமுகம், கூனன் தோப்பு, சாய்வு நாற்காலி, அஞ்சுவண்ணன் தெரு, குடியேற்றம் ஆகிய நாவல்களையும் அன்புக்கு முதுமை இல்லை, தங்கரசு, அனந்த சயனம் காலனி, ஒரு குட்டித் தீவின் வரைபடம், ஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும் உள்ளிட்ட சிறுகதை தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார்.
மலையாளத்திலிருந்து பல படைப்புக்களை தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார்.
இவரது சாய்வு நாற்காலி நாவலுக்கே 1997ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.
வயது முதிர்வு காரணமாக உடல் நலமின்றி இருந்த அவர் இன்று அதிகாலை நெல்லையில் உள்ள தனது வீட்டில் காலமானார். இன்று மாலை அவரது உடலுக்கு இறுதிச்சடங்குகள் நடைபெறுகின்றன.
தோப்பில் முகமது மீரான் அவர்கள் 2014ம் ஆண்டு நமக்கு வழங்கிய நேர்முகத்தை கீழ்க்காணும் இணைப்பில் செவிமடுக்கலாம்.
