SKIP TO MAIN CONTENT

Twitter எனும் மாபெரும் சமூக ஊடகம் தனிமனிதனின் ஆளுகையில் வருகிறது

உலகில் மிகப்பெரிய செல்வந்தரும் Tesla மற்றும் Space X நிறுவனங்களின் நிறுவனருமான Elon Musk, பிரபல சமூக ஊடகமாகிய Twitter ஐ வாங்கியிருப்பது பலருக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் சிலருக்கு மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

Twitter's new owner, billionaire Elon Musk
Twitter's new owner, billionaire Elon Musk Source: AAP

4 min read

Published

By R.Sathiyanathan


Skip to article content

தொழில் நுட்ப உலகில் குறிப்பாக electric vehicles என்ற மின் வாகனத்தயாரிப்பிலும் விண்வெளிக்கு ராக்கட்டுகளை மற்றும் விண்கலங்களை அனுப்புவதிலும் புரட்சியை ஏற்படுத்தியவரும் உலகில் நம்பர் 1 பணக்காரருமான Elon Musk, 44 பில்லியன் டொலர்களுக்கு (அதாவது ஆஸ்திரேலிய டாலர் மதிப்பில் 61 பில்லியன் டாலர் மதிப்பில்) Twitter என்ற சமூக ஊடகத்தை வாங்கியிருப்பது பரபரப்பான செய்தியாகப் பார்க்கப்படுகிறது. ‘ Elon Musk , Twitter ஐ வாங்கி என்ன செய்யப் போகிறார்?’ என்று பலரும் ஆச்சரியம் அடைந்திருக்கிறார்கள்.

Twitter நிறுவனம் இப்போது publicly traded corporation, அதாவது பொதுமக்களுக்கும் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும், முதலீட்டு நிறுவனங்களுக்கும் (investment funds) க்கும் சொந்தமாக இருக்கின்றன. ஆகவே Twitter இன் செயல்பாடுகளைக் கண்காணிப்பதும் கட்டுப்படுத்துவதும் தனிநபரல்ல. அதன் CEO வாக 2021 தொடக்கம் இளம் இந்திய அமெரிக்கரான Parag Agarwal செயல்பட்டுவருகிறார். ஆனால் Elon Musk தனது சொந்தப் பணத்தில் Twitter யின் அனைத்து பங்குகளையும் வாங்குவதால் இனி முற்றுமுழுவதாக அவரது ஏகபோக கட்டுப்பாட்டின் கீழ் Twitter வந்துவிடும். Parag Agarwal தொடரந்து CEO வாக செயல்படக்கூடும் என்று சொல்வதற்கில்லை. ‘தற்போதைய நிர்வாக அமைப்பு தமக்கு நம்பிக்கை தரவில்லை’ என்று Elon Musk கூறியிருக்கிறார்.

Elon Musk terminates multibillion-dollar Twitter deal
In this photo illustration, the Twitter logo is displayed on the screen of the phone, with Elon Musk's Twitter account in the background. Source: AAP Images

நிறுவனத்தின் எதிர்காலம் பற்றி தம்மால் ஒன்றும் சொல்லமுடியாது என்றும் இருந்தபோதும் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படமாட்டார்கள் என்றும் Agarwal ஊழியர்களுக்கு உறுதியளித்திருக்கிறார். Parag Agarwal Twitter ஐ விட்டு நீங்கும் பட்சத்தில் அவர் 42 மில்லியன் டாலர்களைப் பெறுவார் என்று சொல்லப்படுகிறது.

பலரும் எதிர்பார்க்காத முடிவுகளைத் திடீர் திடீரென்று எடுப்பதில் பெயர்பெற்றவரான Elon Musk அடுத்தடுத்து என்ன முடிவுகளை எடுப்பார் என்பது மர்மமாகவே இருக்கிறது.

Twitter ஐ Elon musk வாங்க என்ன காரணம்?

“குடியாட்சி செவ்வனே செயல்பட கருத்துச்சுதந்திரம் இன்றியமையாத அங்கமாகும். மனிதகுலத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் விடயங்களை விவாதிக்கும் ‘digital town square’ - digital நகரத்தின் பிரதான சதுக்கமாக Twitter இருக்கிறது. புதிய அம்சங்களை உட்புகுத்தி நம்பகத்தன்மையை அதிகரிக்கவும் மக்கள் தடையின்றி இதைப்பயன்படுத்தவும் இதற்கு முன்னர் எப்போதுமில்லாதவகையில் Twitter ஐ வடிவமைப்பதே எனது நோக்கம். Twitter இனுள் ஏராளமான அனுகூலங்கள் பொதிந்திருக்கின்றன. நிறுவனத்துடனும் மக்களுடனும் இணைந்து அவற்றை வெளிக்கொணர்வதே எனது எதிர்பார்ப்பாகும்.”என்று Elon Musk கூறியிருக்கிறார்.

ஆனால் Elon Musk ஏன் Twitter ஐ வாங்கினார் என்பது புரியாத புதிராகவே இருப்பதாக இந்தத்துறையில் உள்ள விற்பன்னர்கள் கூறுகிறார்கள். எனவே அவர் என்ன திட்டம் வைத்துள்ளார் என்று யாருக்கும் தெரியவில்லை. ஆனால் Twitter ஐ Elon Musk வாங்கியுள்ளது தொடர்பாக இந்தத் துறையிலுள்ளவர்கள் பல விமரிசனங்களை முன்வைக்கின்றனர்.

Elon Musk Twitter ஐ வாங்கியதை Twitter இன் நிறுவனரும் முன்னாள் CEOவுமான Jack Dorsey வரவேற்றுள்ளதோடு Wall Street யிலிருந்து Twitter ஐ மீட்டெடுத்துள்ளார் என்றும் பாராட்டியுள்ளார். பங்குச்சந்தையிலிருந்து Twitter ஐ மீட்டெடுத்ததையே அவர் இப்படிக் கூறியுள்ளார். ‘மனசாட்சியின் ஒளி மேலும் விரிவடையும்’ என்றும் அவர் கூறியிருக்கிறார். ‘Global consciousness’ என்ற அகில உலக மனசாட்சிக்கு மிக சமீபமானது Twitter என்பது அவரது கருத்தாகும்.

Twitter இன் முன்னாள் தொழில்நுட்பவியல் அதிகாரிகளுள் ஒருவரும் Google, Apple போன்ற நிறுவனங்களிலும் பணியாற்றியுள்ளவருமான Leslie Miley கருத்து தெரிவிக்கும்போது, ‘தான் எதை வாங்கியிருக்கிறோம் என்பது Elon Musk இற்கு தெரியுமா என்பது சந்தேகமாக இருக்கிறது. Twitterஐ நிர்வகிப்பதிலுள்ள சிக்கல்களை அவர் புரிந்துகொள்வார் என்று நான் நினைக்கவில்லை’ என்றும் ‘வாங்கவிரும்புவதற்கும் வாங்கி நடத்துவதற்குமிடையே நிறைய வித்தியாசம் உண்டு’ என்றும் அவர் கூறியிருக்கிறார்.

Tesla and SpaceX Elon CEO Elon Musk
Tesla and SpaceX Elon CEO Elon Musk is one of the world's 10 richest people. Source: Reuters Images Europe/Pool

Twitter தொடர்பாக Elon Musk செய்யவிரும்பும் மாற்றங்கள் ‘technically possible’- தொழில்நுட்பரீதியாக சாத்தியமானதுதானா என்பதுடன் இந்த மாற்றங்கள் users என்ற பயனர்களுக்கு நன்மையளிக்கப் போகிறதா அல்லது Elon Musk இற்கு நன்மையளிக்கப்போகிறதா என்ற கேள்விகள் பல மட்டங்களிலும் கேட்கப்படுகின்றன.

‘Free speech’ கருத்துச்சுதந்திரம் என்ற பெயரில் Elon Musk கோடிட்டுக்காட்டும் விடயங்கள் காரணமாக மேலும் பொய்யான தகவல்களையும் பொய்யான செய்திகளையும் bullying - என்ற அதிகார வன்முறை, hate speech என்ற வெறுப்பை ஏற்படுத்தும் பதிவுகள் என்பவற்றைப் பதிவு செய்யும் தளமாக Twitter மாறிவிடும் என்ற கருத்துக்களும் முன்வைக்கப்படுகின்றன.

இதன் காரணமாக விளம்பரதார்களும் Twitter ஐ விட்டு வெளியேறக்கூடும் என்றும் சொல்லப்படுகிறது. Twitter இலிருந்து வெளியேற்றப்பட்ட அமெரிக்க முன்னாள் அதிபர் Donald Trump ஐ மீண்டும் Twitterஇல் இணைத்துக்கொள்ள Elon musk ஆர்வமாக இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.

Twitterஇன் வரலாறும் வலிமையையும்

Twitter 2006 ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்தது. Jack Dorsey என்பவர், தன் நண்பர்களுடன் இணைந்து இதை ஆரம்பித்தார். நண்பர்களும் உறவினர்களும் சக ஊழியர்களும் தொடர்பிலிருக்கவும் குறுந்தகவல்களை அடிக்கடி பரிமாறிக்கொள்ளும் நோக்கத்துடனும் Twitter தொடங்கப்பட்டது. இது தொடங்கப்பட்ட பின்பு WhatsApp, Viber, Messenger என்று ஏராளமான தகவல்களை செய்திகளைப் பரிமாறும் சமூக ஊடகங்கள் அறிமுகமானதால் சமூகத்தின்ஒரு குறிப்பிட்ட சாரார் மட்டுமே Twitter உடன் பயணிக்கிறார்கள். இவர்கள் யார் என்று பாரத்தால் social network of journalists- ஊடகவியலாளர்கள் இணைந்த குழுக்கள், celebrities என்ற பிரபலங்கள், மற்றும் அரசியல்வாதிகள் என்று கூறலாம்.

Digital Policy Council என்ற அமைப்பின் அறிக்கையின்படி உலகத் தலைவர்களுள் சுமார் 83 சதவீதத்தினர் Twitter ஐ அடிக்கடி பயன்படுத்துகிறார்கள். Facebook உடன் ஒப்பிடும்போது, Facebook ஐ தினமும் சராசரி 1 பில்லியன் பேர் பயன்படுத்துகிறார்கள். ஆனால் சுமார் 500 மில்லியன் பேர் அளவில் மட்டுமேTwitter ஐப் பயன்படுத்துகிறார்கள். உலகில் உள்ள எல்லா சமூக ஊடகங்களையும் பார்க்கும்போது சுமார் 3 பில்லியன் பயனாளர்கள் Facebook, Twitter, instagram போன்ற எல்லா ஊடகங்களையும பயன்படுத்துகிறார்கள். இருந்தபோதும் Facebook மற்றும் Twitter இரண்டுமே சக்திமிக்க இரண்டு ஊடகங்களாகப் பாரக்கப்படுகின்றன. Facebook ஐப் பயன்படுத்தும் 75 வயதிற்கு மேற்பட்டோரின் எண்ணிக்கை கடந்த வருடம் இரட்டிப்பாகி இருப்பதாக க் கூறப்படுகிறது. ஆனால் நாம் முன்னர் சொன்ன குறிப்பிட்ட பிரிவினரைத்தவிர Twitter ஐப் அதிகமாகப் பயன்படுத்துபவர்கள் இளைஞர் யுவதிகள். Facebook தளம் நூற்றுக்கும் அதிகமான language flatforms -மொழித்தளங்களைக் கொண்டிருப்பதால் Facebook இன் வீச்சு விரிவானது. Twitter சுமார் 30 மொழித்தளங்களை மட்டுமே கொண்டிருக்கிறது.

Markets
私隱專員發現社交平台積極搜集個人資料。 Source: Wikimedia Commons Ibraham.ID CC BY SA 4.0

Elon musk Twitter ஐ 44 பில்லியன் டாலர்களுக்கு வாங்க ஒப்புக்கொண்டுள்ளபோதும் இதற்கான நிதியை அவர் இனித்தான் திரட்டவேண்டும் என்று சொல்லப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தை வெற்றிகரமாக முடிக்க முடியாத பட்சத்தில் யார் தோல்வியைச் சந்தித்தாலும் 1 பில்லியன் டாலர் தொகையை அபராதமாகப் மற்ற தரப்பினருக்கு செலுத்த வேண்டும். அதாவது 61 பில்லியன் டாலர் தொகையை Elon Musk செலுத்த முடியாமல் போனால் டிவிட்டருக்கு 1 பில்லியன் டாலர் அவர் அபராதம் செலுத்த வேண்டும். இதேபோல் டிவிட்டர் நிர்வாகம் 100 சதவீத பங்குகளை எலான் மஸ்க் கட்டுப்பாட்டில் அளிக்காவிட்டால் டிவிட்டர் Elon Muskகிற்கு அபராதம் செலுத்த வேண்டும்.

செய்யமுடியாது என்று பலரும் சொன்னவற்றைச் செய்துகாட்டியவர் Elon Musk என்ற வகையில் இதையும் அவர் சாதிப்பார் என்றே பலரும் நம்புகிறார்கள். என்றபோதும் இவ்வருட இறுதியளவில்தான் Twitter எனும் ஆல விருட்சமான சமூக ஊடகம் Elon musk இன் கைகளில் முழுமையாக வந்து சேரும்.


 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now