சுமார் இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட Double-Demerits தண்டனையினால் விடுமுறை காலங்களில் நியூ சவுத் வேல்ஸ் சாலைகளில் ஏறத்தாழ 433 மரணங்களைத் தவிர்க்க முடிந்துள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த ஈஸ்டர் விடுமுறையில் வாகன ஓட்டிகளை மெதுவாகத் தமது வாகனங்களை ஒட்டச்செய்யும் நோக்குடன் NSW Police, NSW Ambulance மற்றும் the Centre for Road Safety ஆகியன இணைந்து Operation Tortoise எனும் ஒரு செயல்பாட்டினை ஆரம்பித்துள்ளனர்.
The NSW Government added illegal mobile phone use to the list of offences subject to double-demerit points in December 2015.
மேலதிகமாக 1300 க்கு மேற்பட்ட போலீஸ் உத்தியோகத்தர்கள் இந்த ஈஸ்டர் விடுமுறைக் காலத்தில் சாலைகளில் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக Assistant Police Commissioner Michael Corboy தெரிவித்துள்ளார்.
வேகமான ஓட்டுனர்கள், மது மற்றும் போதை மருந்து உடகொண்டுவிட்டு வாகனம் ஓட்டுவோர் ஆகியோரைத் தாம் இலக்கு வைத்துள்ளதாகவும், அத்துடன் Double-Demerits தண்டனையானது seat belts, helmets அணியாமல் செல்வோருக்கும் பொருந்துமெனவும், மேலும் வாகனம் ஓட்டும்போது கைத் தொலைபேசியைப் பாவிப்போர் மற்றும் கவனக்குறைவாக ஓட்டுவோரையும் தாம் உன்னிப்பாகக் கவனிக்கவுள்ளதாக Michael Corboy மேலும் கூறியுள்ளார்.
சட்டவிரோதமாகக் கைத்தொலைபேசிகளைப் பாவித்தல் மற்றும் வாகனங்களை ஓட்டும் பொது கைத்தொலைபேசியைத் தொடுதல், குறுஞ்செய்தி (Text Message) அனுப்புதல்/பார்த்தல் ஆகிய செயல்களைச் செய்வோரைப் பிடித்தல் ஆகியனவும் பொலிஸாரின் இலக்குகளாகும்.
"[We're] not only concerned about the increased use of texting but also social media use whilst driving and in fact, our officers have booked people for watching videos and also watching movies while they are driving," he said.
