SKIP TO MAIN CONTENT

எப்போது பல்துலக்குவது நல்லது? காலையிலா? இரவிலா?

பல் மருத்துவரிடம் சென்று எப்போது பல் துலக்குவது நல்லது? என்று கேட்டால், உடனடி வரும் பதில் என்னவாக இருக்கும்?

Tooth brush
Source: AAP

1 min read

Published

By Raymond Selvaraj

Source: ABC Australia


Skip to article content

பல் மருத்துவரிடம் சென்று எப்போது பல் துலக்குவது நல்லது? என்று கேட்டால், உடனடி வரும் பதில் என்னவாக இருக்கும்?

ஒரு நாளில் இருமுறை பல் துலக்குங்கள் என்பதுதான்.

சரி, இரு முறை என்றால், எப்போதெல்லாம் பல் துலக்குவது?

கலையில் எழுந்ததும், இரவில் படுக்கைக்கு போகும் முன்னரும்.

இதுதான் மெல்பன் பல்கலைக் கழகத்தின் பல்லியல் துறை பேராசிரியர் David Manton அவர்களின் பதில்.

சரி, இந்த இருமுறை பல் துலக்குவதில் எது அதிக முக்கியத்துவம் மிக்கது?

நிச்சயம் படுக்கைக்கு போகும் முன்னர் பல்துலக்குவதே அதி முக்கியம் என்கிறார் பேராசிரியர்.

ஏன் அப்படி?

நாம் இரவில் பல் தேய்க்காமலிருந்தால் பற்களுக்கிடையே உணவு துகள்கள் பல மணி நேரங்கள் தங்கியிருந்து பல்லில் கேடு விளைவிக்கும் என்கிறார்  பேராசிரியர் David Manton.

காலையில் பல் துலக்கும்போது காலைச் சாப்பாட்டை முடித்துவிட்டு பல் துலக்குவது நல்லதா அல்லது காலை சாப்பாட்டுக்கு முன்னர் பல் துலக்குவது நல்லதா?

கலையில் நீங்கள் எப்போது பல்துலக்கினாலும், பெரிய வித்தியாசமில்லை என்கிறார் பேராசிரியர் David Manton.

சிறுவர் சிறுமிகளுக்குத்தான் பல் தொடர்பான நோய்களும் பிரச்சனைகளும் அடிக்கடி வருகின்றன. அதற்குக் காரணம் அவர்கள் இனிப்பு அல்லது இனிப்பு மிகுந்த பானங்களை அருந்துவதே. இப்போது குழந்தை, பல் இருக்கும் மழலை என்று மிகவும் சிறு வயதிலும் பல் நோய்கள் வந்துவிடுகின்றன.           


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now