நீங்கள் ஆஸ்திரேலியாவில் வீடு வாங்க திட்டமிடுகிறீர்களா? அப்படியென்றால் என்னென்ன மாதிரியான வீடுகளுக்கு அல்லது கட்டடங்களுக்கு வங்கிகள் கடன்கொடுக்க விரும்புவதில்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
வங்கிக்கடன் வழங்கப்பட மாட்டாது அல்லது கடன் பெறுவது மிகவும் சிரமம் எனக் கருதப்படும் வீடுகள் அல்லது கட்டடங்கள் எவையென்பதை பிரபல வங்கிகள் மற்றும் விற்பனை முகவர்களை மேற்கோள்காட்டி கீழ்க்காணும் பட்டியலை Domain வெளியிட்டுள்ளது.
1. 40 சதுர அடிக்கும் குறைவான அளவுள்ள apartment
2. Student apartment or Serviced apartment.
3. ஆபத்தான அல்லது கூடாத சுற்றுப்புறத்தைக் கொண்ட வீடு.
4. அளவுக்கதிகமான கட்டுமானப்பணிகள் நடைபெறும் பகுதிகளில் உள்ள ஒரே மாதிரியான அடுக்குமாடிக் குடியிருப்புகள்.
5. வழமைக்கு மாறான பெயரைக் கொண்ட சொத்து.
6. கட்டுமானம் அல்லது வடிவமைப்பில் சிக்கல்கள் கொண்ட சொத்து.
7. புவியியல் ரீதியாக சிக்கல்கள் ஏற்படக்கூடிய சொத்து. உதாரணமாக கடற்கரைக்கு மிக அண்மையில் உள்ள வீடு.
