SKIP TO MAIN CONTENT

மெல்பேர்ன் Etihad அரங்கின் பெயர் மாற்றப்படுகிறது!

File image of Etihad Stadium
Etihad Stadium will become Marvel Stadium from September. Source: AAP

1 min read

Published

Updated

Presented by Renuka



Skip to article content

மெல்பேர்னின் பிரபல விளையாட்டரங்கான Etihad Stadium இனி Marvel Stadium என பெயர்மாற்றம் பெறுகிறது.

Walt Disney Company Australia நிறுவனத்துடன் செய்துகொண்ட உடன்படிக்கையின்படி குறித்த அரங்கு எதிர்வரும் செப்டம்பர் 1ம் திகதியிலிருந்து Marvel Stadium என அழைக்கப்படவுள்ளது.

குறித்த நிறுவனத்துடனான பெயர் மாற்ற ஒப்பந்தம் அடுத்த 8 ஆண்டுகளுக்கு செய்யப்பட்டுள்ள நிலையில் இவ்வரங்கினுள் Marvel shop ஒன்றும் நிறுவப்படவுள்ளது.

பொழுதுபோக்கு உலகின் ஜாம்பவான் எனப் பார்க்கப்படும் Marvel-உடனான புதிய ஒப்பந்தமானது அதிகளவானோரை விளையாட்டரங்கிற்குள் ஈர்க்கும் எனத் தாம் நம்புவதாக Melbourne Stadiums Limited தலைமை நிர்வாகி Michael Green தெரிவித்துள்ளார்.

2016ம் ஆண்டு முதல் AFL-க்குச் சொந்தமான இவ்வரங்கில் ஒவ்வொரு season–க்கும் சுமார் 45 ஆட்டங்களுக்கு மேல் நடைபெறுவது வழக்கம்.

இதேவேளை Etihad அரங்கானது இதற்கு முன்னர் Docklands stadium, Colonial Stadium மற்றும் Telstra Dome ஆகிய பெயர்களால் அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now