ஒவ்வொரு மாநிலங்களிலும் தகமை பெறும் பள்ளி செல்லும் மாணவர்களின் பெற்றோருக்கு என்ன உதவிகள் கிடைக்கின்றன என்று பார்ப்போம்.
Victoria
Centrelinkல் பதிவு செய்துள்ள ஆரம்ப பள்ளி மாணர்வர்களின் பெற்றோர் தங்களின் பிள்ளைகளின் சுற்றுலா மற்றும் camp செல்வதற்கான செலவுகளுக்கு 125 டாலர்கள் வரை அரசிடம் கோரலாம். 2020 முதல் விக்டோரியா மாநில அரசு இதற்காக கூடுதலாக 160.9 மில்லியன் டாலர்களை அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு ஒதுக்க உள்ளது. இதற்கு தகமை பெறும் மாணவர்களின் பெற்றோர் தங்களின் விண்ணப்பத்தை பள்ளியின் இரண்டாம் தவணை முடிவதற்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
புதிய பள்ளி சீருடை, காலணிகள் மற்றும் நோட்டு புத்தகங்கள் வாங்குவதற்கு "State School Relief" என்ற திட்டத்தை விக்டோரியா மாநில அரசு வழங்கி வருகிறது.
அதேபோல் ஆண்டு 4 - 6 படிக்கும் மாணவர்களுக்கு $500 முதல் $1000 வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது .
மேலதிக தகவல்களுக்கு : https://www.vic.gov.au/grants.html?type=grants
New South Wales
பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு வெளியே தகுதி பெறும் நிறுவனங்களில் கற்றுக் கொள்ளும் கலை மற்றும் விளையாட்டிற்கு அரசு $100 உதவித்தொகை வழங்குகிறது. மேலும் தகுதி பெறும் மாணவர்கள் வீட்டிலிருந்து பள்ளிக்கு சென்று வர இலவச அல்லது குறைந்த விலை பயணச்சீட்டு வழங்கப்படுகிறது.
மேலதிக தகவல்களுக்கு : https://www.service.nsw.gov.au/campaign/active-kids
Queensland
QKFS Plus Kindy திட்டத்தின் கீழ் தகுதி பெரும் மழலை பள்ளி மாணவர்கள் நிதி உதவி பெற்றுக்கொள்ளலாம்.
குயின்ஸ்லாந்து மாநில அரசு மாணவர்களின் sports club உறுப்பினர் மற்றும் பங்கேற்பு கட்டணத்திற்கு $150 FairPlay voucher வழங்குகிறது.
உயர்க்கல்வி பயிலும் மாணவர்களின் படிப்பு புத்தகங்கள் மற்றும் மற்றைய பள்ளி செலவுகளுக்கு மாநில அரசு நிதி உதவி வழங்குகிறது.
மேலதிக தகவல்களுக்கு : https://education.qld.gov.au/about-us/budgets-funding-grants/grants/parents-and-students/textbook-resource-allowance
South Australia
தெற்கு ஆஸ்திரேலியா மாநில அரசின் School Card திட்டத்தின் கீழ் தகுதி பெறும் மாணவர்களின் குடும்பத்திற்கு பள்ளி கட்டணம் உட்பட சீருடை மற்றும் சுற்றுலா செல்லும் செலவுகளுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது . இதில் பதிவு செய்ய http://www.sa.gov.au/topics/education-and-learning/financial-help-scholarships-and-grants/school-card-scheme
இதோடு ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு $100 spots voucher மற்றும் பள்ளியிலிருந்து 5 கிமீட்டருக்கு மேலதிகமான தூரத்தில் வசிக்கும் மாணவர்களுக்கு பயண சலுகைகள் போன்ற உதவிகளை தெற்கு ஆஸ்திரேலியா மாநில அரசு வழங்கு வருகிறது.
Western Australia
மேற்கு ஆஸ்திரேலியா மாநில அரசு தகுதி பெறும் பள்ளி மாணவர்களின் spots club செலவுகளுக்கு ஆண்டுக்கு ஒரு முறை kidsport திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்குகிறது. ஆனால் இந்த நிதி உதவியை பள்ளி ஆரம்பித்து 90 நாட்களுக்குள் பெற்றுக் கொள்ள வேண்டும்.
மேலதிக தகவல்களுக்கு : https://www.dsr.wa.gov.au/funding/individuals/kidsport/applying-for-kidsport
Tasmania
குறைந்த வருமானம் உள்ள பள்ளி மாணவர்களின் பெற்றோருக்கு டாஸ்மேனிய மாநில அரசு நிதி உதவி வழங்குகிறது. அதோடு பள்ளி சீருடை வாங்க மற்றும் மாணவர்களுக்கு மூக்குக்கண்ணாடி வாங்கவும் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவிலேயே பள்ளி மாணவர்களுக்கு மூக்குக்கண்ணாடி வாங்க நீதி உதவி வழங்கும் அரசு டாஸ்மேனிய மாநில அரசு மட்டுமே.
மேலதிக தகவல்களுக்கு : http://www.dpac.tas.gov.au/divisions/csr/sportrec/funding_grants
Northern Territory
"Back to School Payment Scheme" மூலம் $150 வரை முதல் தவணை படிப்பு செலவுக்காக தகுதி பெரும் Northern Territory பெற்றோர் நிதி உதவி பெற்றுக்கொள்ளலாம்.
ஆரம்ப பள்ளி முதல் ஆண்டு 12 வரை உள்ள மாணவர்களுக்கு Sports vouchers வழங்கப்படுகிறது.
கிராமப்புற மாணவர்களுக்கு ஆண்டிற்கு இருமுறை கலாச்சார மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்காக $100 voucher வழங்கப்படுகிறது.
மேலதிக தகவல்களுக்கு : https://nt.gov.au/leisure/sport/sport-voucher-scheme-urban/get-sport-vouchers-for-your-child
Australian Capital Territory
இந்த ஆண்டு முதல் மூன்று வயது குழந்தைகளுக்கு வாரத்தில் 15 மணி நேரம் இலவசமாக குழந்தை பருவ கல்வி அரசு வழங்குகிறது.
தகுதி பெறும் ஆண்டு 7-10 மாணவர்ககளுக்கு ஆண்டுக்கு ஒருமுறை 750 டாலர்கள் வழங்கப்படுகிறது.
மேலதிக தகவல்களுக்கு : https://www.assistance.act.gov.au/parent/education_and_training
