SKIP TO MAIN CONTENT

'ALDI Pressure Cooker பயன்படுத்திய 6 பேர் காயம்'

AAP
Source: AAP

1 min read

Published

Updated

Presented by Renuka



Skip to article content

ALDI பல்பொருள் விற்பனை நிலையங்களில் விற்கப்பட்ட pressure cooker-ஐப் பயன்படுத்திய 6 பேர் எரிகாயங்களுக்குள்ளானதாக நுகர்வோர் கண்காணிப்பு குழுவான Chioce தெரிவித்துள்ளது.

ALDI-யில் விற்பனை செய்யப்பட்ட Crofton Chef's Collection pressure cooker-ஐப் பயன்படுத்திய 6 பேர், அது வெடித்ததால், தமது முகம், கண், உடற்பகுதி போன்றவற்றில் இரண்டாம் அல்லது மூன்றாம் நிலை எரிகாயங்களுக்குள்ளானதாக Choice கூறியுள்ளது.

இவர்களில் 4 பேர், குறித்த pressure cooker-களை மீளப்பெறுவதாக ALDI அறிவித்ததன் பின்னர் காயங்களுக்குள்ளாகியதாக Choice குறிப்பிட்டுள்ளது.

இவ்வருடம் ஜுன் 28ம் திகதி, நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா, தெற்கு ஆஸ்திரேலியா, குயின்ஸ்லாந்து மற்றும் மேற்கு ஆஸ்திரேலியா மாநிலங்களிலுள்ள ALDI விற்பனை நிலையங்களில் மட்டும் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்பட்ட, 60 டொலர் பெறுமதியான இந்த pressure cooker-களைக் கொள்வனவு செய்தவர்கள், அவற்றைத் திரும்ப ஒப்படைத்து பணத்தை மீளப்பெற்றுக்கொள்ளுமாறு ஆகஸ்டில் ALDI நிறுவனம் அறிவித்திருந்தது.

எனினும் விற்பனையாகிய 8,405 pressure cooker-களில் கால்வாசியே தம்மிடம் மீள ஒப்படைக்கப்பட்டதாக ALDI தெரிவித்துள்ளளமை குறிப்பிடத்தக்கது.

 

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now