ஆர்ப்பாட்டக்காரர்கள் மெல்பன் நகரின் முக்கிய இடங்களில் சாலை மறிப்புப் போராட்டத்தில் இன்று ஈடுபட்டுள்ளனர்.
அவர்களில் அனேகமானவர்கள் வேலைக்கு செல்லும் உடைகளில் இருந்தார்கள் என்று கூறப்படுகிறது.
பல ஊடகவியலாளர்களும் இதில் தாக்கப்பட்டுள்ளார்கள்.
தொழிற்சங்கத் தலைவர்களுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இந்த ஆர்ப்பாட்டத்தினை காவல்துறையினர் கண்ணீர் புகை கொண்டு கலைத்தனர்.
தடுப்பூசி குறித்த தவறான தரவுகள் பகிரப்படுவதை நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்உம் என்ற கோரிக்கை தற்போது எழுந்துள்ளது.

விக்டோரிய மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 603 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றினால் ஒருவர் இறந்துள்ளார்.
