கொரோனா வைரஸ் தொற்று உலகளாவிய ரீதியில் அசுரவேகத்தில் பரவலடையத்தொடங்கியிருப்பதை அடுத்து பலரும் முகக்கவசங்களை(mask) அணிந்துவருவதால் ஆஸ்திரேலியாவில் முகக்கவசத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து online ஊடாக முகக்கவசங்களை கொள்வனவு செய்ய முற்படும் பலர் இணைய மோசடியில் சிக்குவதாக குறிப்பிடப்படுகிறது.
அதேவேளை, சில கடைகளில் குறித்த விலைகளிலும் பார்க்க நான்கு மடங்கு விலைகளில் இந்த முகக்கவசம் விற்பனை செய்யப்படுவதாகவும் அறியவருகிறது.
சிட்னியில் சீனர்கள் செறிந்துவாழும் பிரதேசமொன்றில் 50 முகக்கவசங்கள் அடங்கிய பெட்டி 400 டொலர்களுக்கு இந்த வாரம் விற்பனையாகியுள்ளது. ஒரு முகக்கவசம் 10 டொலருக்கும் 12 முகக்கவசங்கள் கொண்ட பெட்டி 100 டொலர்களுக்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
முகக்கவசங்களைக்கேட்டு வருகின்ற வாடிக்கையாளர்களினால் தாம் திண்டாடுவதாக மருந்தகங்கள் தெரிவித்துள்ளன. தங்கள் கடைக்கு வருகின்ற வாடிக்கையாளர்களில் ஐந்து நிமிடங்களுக்கு ஒருவர் முகக்கவசம் கேட்டு வருவதாக அவை கூறுகின்றன.
அநேக மருந்தகங்கள் தங்களிடம் முகக்கவசங்கள் விற்பனைக்கில்லை அல்லது முடிவடைந்துவிட்டது என்று கடைக்கு முன்னால் எழுதிவைத்திருக்கிறார்கள்.
இதுஒருபுறமிருக்க முகக்கவசங்களை online ஊடாக வாங்கும்போது எச்சரிக்கையாக இருக்குமாறும் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட முகக்கவசங்களை மோசடிக்காரர்கள் விற்பனை செய்வதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
Share
