SKIP TO MAIN CONTENT

உங்கள் பதிவை எத்தனை பேர் விரும்புகிறார்கள் தெரியுமா?

இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஆஸ்திரேலியா உட்பட தேர்ந்தெடுக்கப்பட்ட சில நாடுகளில் ஒருவரின் பதிவை எத்தனை பேர் விரும்புகிறார்கள் என்ற எண்ணிக்கையை இன்ஸ்டக்ராம் (Instagram) மறைக்க ஆரம்பித்தது. அவர்களில் வழியை, இப்போது ஃபேஸ்புக் (Facebook) பின்பற்ற நினைக்கிறது.

Facebook likes
Source: Getty Images

2 min read

Published

Updated

By Velvet Winter, Kulasegaram Sanchayan



Skip to article content

தாங்கள் பகிர்ந்ததை எத்தனை பேர் விரும்பியிருக்கிறார்கள் என்பதை தொடர்ந்து அவதானித்து, அதனால் மனக் குழப்பங்கள் அடைந்தவர்கள் பலர்.  தம்முடைய நெருங்கிய நண்பர்களை சண்டைக்கு இழுத்தவர்கள் சிலர்.

அப்படி எத்தனை பேர் விரும்பியிருக்கிறார்கள் (Like செய்திருக்கிறார்கள்) என்பது தெரியாவிட்டால், அந்த எண்ணிக்கையால் மனம் மாறாமல், பதிவேற்றப்பட்டிருக்கும் படத்தின் உண்மையான அழகை ஒருவர் இரசிக்க முடியும் என்று இன்ஸ்டக்ராம் நம்பியது.

ஃபேஸ்புக் இலும் அதற்கான செய்முறை இருப்பதை, செயலி குறித்து ஆராய்ச்சி செய்யும் Jane Manchun Wong இந்த வாரம் கண்டுபிடித்துள்ளார்.  அதனை செயற்படுத்தினால், பதிவிட்டவருக்கு மட்டும் தான் அவரது பதிவு எத்தனை பேரால் Like செய்யப்பட்டது என்று அறிய முடியும்.  அந்த எண்ணிக்கை மற்றவர்களுக்குத் தெரியாது:

இன்ஸ்டக்ராம் போலவே, ஒரு பதிவை எத்தனை பேர் விரும்பினார்கள் என்பதற்கான முழு பட்டியலையும் இன்னும் காண முடியும், ஆனால் ஃபேஸ்புக் பயனர்களுக்கு , “(ஒரு நண்பர்) அல்லது மற்ற ஒருவர்” விரும்பியதாக மட்டுமே தெரியும்.

Manchun Wong கண்டுபிடித்ததைப் பகிரங்கப்படுத்தியதைத் தொடர்ந்து, தாம் எத்தனை பேர் 'like' செய்துள்ளார்கள் என்ற எண்ணிக்கையை மறைக்க நினைத்திருப்பதாக TechCrunch இடம் ஃபேஸ்புக் ஒப்புக் கொண்டுள்ளது.  ஆனால் அதற்கான காலவரை என்ன என்று கூறவில்லை.

 

ஃபேஸ்புக் நிறுவனம் தான் இன்ஸ்டக்ராம் செயலிக்கும் உரிமையாளர்.  ஆனால், இன்ஸ்டக்ராமில் விருப்பு எண்ணிக்கைகளை (like counts) அகற்றியதால் என்ன மாற்றத்தைக் கண்டார்கள் என்பது குறித்த எந்த தகவலையும் வெளியிட மறுத்து விட்டது.

 

விருப்பு எண்ணிக்கைகளை அகற்றப் போவதாக இன்ஸ்டக்ராம் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடுவதற்கு 12 நாட்களுக்கு முன்னரே அது குறித்த செய்தியைப் பகிரங்கப்படுத்தியவர் நபர் Manchun Wong தான்.

தற்போது, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பிரேசில், ஜப்பான், இத்தாலி மற்றும் அயர்லாந்து உள்ளிட்ட ஏழு நாடுகளில், விருப்பு எண்ணிக்கையை மறைத்து சோதித்து வருகிறது இன்ஸ்டக்ராம்.

அதனை ஃபேஸ்புக் இல் செயல்படுத்துவது, விளம்பரதாரர்கள் மற்றும் செல்வாக்கு செலுத்துபவர்களுக்கு எவ்வாறு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தாது என்பதைக் கணித்த பின்னர் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று, Manchun Wong தனது வலைப்பூங்காவில் பதிவு செய்துள்ளார்.

Catch The Feed 8:30pm Thursdays and 5pm Sundays on SBS VICELAND . Connect with us on Facebook, Twitter and Instagram.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now