SKIP TO MAIN CONTENT

குறைந்த ஊதியம் பெறுபவர்களுக்கு ஜுலை 1 முதல் சம்பள உயர்வு!

Dollars and dollars
Source: AAP

1 min read

Published

Updated

Presented by Renuka



Skip to article content

ஆஸ்திரேலியாவில் minimum wage-ஆகக்குறைந்த சம்பளம் பெறும் பணியாளர்கள் 3.5 வீத ஊதிய உயர்வு பெறவுள்ளதாக Fair Work Commission அறிவித்துள்ளது.

இதன்படி எதிர்வரும் ஜுலை 1 முதல் நாடுமுழுவதுமுள்ள 2.3 மில்லியன் பணியாளர்கள் வாரமொன்றுக்கு 24.30 டொலர்கள் கூடுதலாகப் பெறவுள்ளனர்.

இதுவரை காலமும் முழுநேர பணியாளர் ஒருவருக்கு மணித்தியாலமொன்றுக்கு வழங்கவேண்டிய ஆகக்குறைந்த சம்பளமாக 18.29 டொலர்கள்(வாரத்திற்கு 694.90 டொலர்கள்) காணப்பட்ட நிலையில் அது தற்போது 18.93 டொலர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது ஆஸ்திரேலியாவின் ஆகக்குறைந்த வாராந்த சம்பளம் 719.20 டொலர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆகக்குறைந்த ஊதியம் பெறுபவர்களுக்கு வாரமொன்றுக்கு 50 டொலர்களால் சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டுமென தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்த அதேநேரம் இதற்கு மறுப்புத் தெரிவித்த வர்த்தக அமைப்புக்கள் வாரமொன்றுக்கு 13 டொலர்கள் அதிகரிப்பே வழங்க முடியுமென வாதிட்டுவந்தன.

இந்தநிலையில் தனது வருடாந்த மீளாய்வினை மேற்கொண்ட Fair Work Commission வாரமொன்றுக்கு 24.30 டொலர்களால் சம்பளத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.

இதேவேளை  casual loading தொடர்ந்தும் 25வீதமாகவே பேணப்படவுள்ளது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now