SKIP TO MAIN CONTENT

Woolworths கூப்பன் மோசடி: பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

Woolworths issues urgent warning over $100 discount scam.
Woolworths issues urgent warning over $100 discount scam. Source: Facebook via New Idea Food

1 min read

Published


Skip to article content

Woolworths நிறுவனத்தில் பொருட்களை வாங்கும்போது 100 டொலர்கள் கழிவுபெறலாம் என்பதான கூப்பன்/சலுகைச் சீட்டு,  மோசடிக்காரர்களால் முகநூலில் பகிரப்பட்டு வருவதாகவும் இதை நம்பி ஏமாறவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Woolworths நிறுவனத்தால் வெளியிடப்பட்டதுபோன்று தோற்றமளிக்கும் இக்கூப்பன்களை பெறவேண்டுமெனில் முகநூலில் பகிரப்பட்டிருக்கும் இணைப்பிற்குச் சென்று சில விபரங்களைப் பூர்த்திசெய்ய வேண்டும்.

குறித்த விபரங்கள் பின்னர் இணையமோசடிக்காரர்களால் வெவ்வேறு தேவைகளுக்குப் பயன்படுத்தப்படும்.

எனவே இம்மோசடி தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறும், முகநூலில் பகிரப்படும் கூப்பன்கள் Woolworths நிறுவனத்திற்குச் சொந்தமானது அல்லவெனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கூப்பன்களின் நம்பகத்தன்மையை அதிகரிப்பதற்கு மோசடிக்காரர்கள் தமது இலச்சினையையும் barcode போன்ற அம்சங்களையும் பயன்படுத்தியிருப்பதாகவும், இதனால் வாடிக்கையாளர்கள் ஏமாந்துவிடவேண்டாம் எனவும் Woolworths நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் குறித்த மோசடி தொடர்பில் தொடர்பில் ACCC-இன் SCAM Watch-க்கு அறியத்தந்திருப்பதாகவும் தமது இணையத்தளத்தில் இம்மோசடி குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் Woolworths நிறுவனம் தெரிவித்துள்ளது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now