சிட்னியில் டிசெம்பர் 9 ஆம் திகதி புதன்கிழமை அதிகாலை 1.47 மணிக்கு பிறந்த குழந்தை, அறுபது வருடங்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு இலவச பீட்ஸாவை பெற்றுக்கொள்ளும் வகையில் பணப்பரிசை வென்றுள்ளது.
பிரபல பீட்ஸா உணவகங்களில் ஒன்றான Domino's Pizza தனது அறுபதாவது பிறந்த தினமான டிசெம்பர் 9 ஆம் திகதி, ஆஸ்திரேலியாவில் பிறக்கும் குழந்தைக்கு Dominic அல்லது Dominique என்று பெயர் சூட்டப்படும்பட்சத்தில், அறுபது வருடங்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு இலவச பீட்ஸாவைப் பெறுவதற்கான போட்டியில் தகுதிபெறமுடியும் என தெரிவித்திருந்தது.
இந்த அறிவிப்பின் பிரகாரம், சிட்னியில் பிறந்து Dominic என்று பெயர் சூட்டப்பட்ட குழந்தை வெற்றிபெற்றுள்ளது.
இதைத்தொடர்ந்து மாதமொரு பீட்ஸாவுக்கு 14 டொலர்கள் என்ற அடிப்படையில் 10,080 டொலர்கள் பணப்பரிசு இக்குழந்தைக்கு வழங்கப்படுகிறது.
