SKIP TO MAIN CONTENT

$25,000 மருத்துவக் கட்டணம் - அதிர்ச்சியில் குடும்பம்

அமெரிக்காவிற்கு சுற்றுலா சென்ற போது அங்கு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சைக்காக 25,000 டாலர்கள் கட்டணம்.

Zuckerberg San Francisco General Hospital
Source: Seven Network

1 min read

Published

Updated

By Selvi



Skip to article content

2016ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள San Franciscoவிற்கு விடுமுறைக்கு சென்ற தென் கொரியாவை சேர்ந்த குடும்பம் ஒன்று, அங்கு தங்கியிருந்த விடுதியில் கட்டிலில் இருந்து தவறி கீழே விழுந்து தலையை மோதிக்கொண்ட தனது 8 மாதக் குழந்தைக்கு அங்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டதற்காக, அவர்களுக்கு தற்போது கிட்டத்தட்ட 25,000 டாலர்கள் கட்டணம் செலுத்துமாறு  கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.  

 தாங்கள் பயணக் காப்பீடு எடுத்திருந்த போதும், காப்பீடு 7,000 டாலர்கள் வரைதான் பொறுப்பேற்கும்  என்றும் மருத்துவமனை கேட்கும் தொகை மிகவும் அதிகம் என்றும் அக்குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

 

911 என்ற அவசர இலக்கத்தை அழைத்து ஆம்புலன்ஸ் மூலம் Zuckerberg San Francisco பொது மருத்துவமனைக்கு குழந்தை கொண்டு செல்லப்பட்டதாகவும் அங்கு கண்காணிப்பிலேயே அதிக நேரம் தனது மகன் வைக்கப்பட்டிருந்ததாகவும் அதற்கா இவ்வளவு கட்டணம் என்று குடும்பத்தினர் புலம்பி வருகின்றனர்.

 

ஆனால் கண்காணிப்பிலிருந்த குழந்தையை பல மருத்துவ நிபுணர்கள் ஒரே சமயத்தில் வந்து பரிசோதித்ததே இக்கட்டணத்திற்கு காரணம் என்று மருத்துவமனை கூறியுள்ளது.

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now