இந்த நிதியில் அடுத்த நான்கு ஆண்டுகளில் 413.8 மில்லியன் டாலர் செலவிட்டு ASIO எனப்படும் ஆஸ்திரேலிய பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின் "மிகவும் சிக்கலான பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து பதில் நடவடிக்கை எடுக்கும் திறனை” மேம்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
சீனாவுடனான உறவு மோசமடைந்துவரும் பின்னணியில் நாட்டின் வர்த்தக மற்றும் மூலோபாய திறன்களை உயர்த்துவதற்காக நான்கு ஆண்டுகளில் கிட்டத்தட்ட 200 மில்லியன் டாலர்களை அரசு ஒதுக்கியுள்ளது. இந்த நிதியை ஏற்றுமதியாளர்களுக்கு அவர்களின் வியாபாரத்தை, சந்தைகளை எவ்வாறு சர்வதேச நாடுகளிடம் விரிவுபடுத்தலாம் அல்லது பன்முகப்படுத்தலாம் என்பது குறித்த ஆலோசனைகளுக்கும் நடவடிக்கைகளுக்கும் அரசு செலவிட திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த நிதி உலக வர்த்தக அமைப்பு மூலம் முறையிடப்படும் வழக்குகளுக்கு உதவவும், சர்வதேச ரீதியில் ஆஸ்திரேலியாவின் திறனை அதிகரிக்கவும் பயன்படுத்தப்படும்.
நாட்டில் அதிகரித்துவரும் இணைய தாக்குதல்களுக்கான பதில் நடவடிக்கைக்கு வர்த்தக நிறுவனங்களுக்கு உதவ எதிர்வரும் இரண்டு ஆண்டுகளில் அரசு 42 மில்லியன் செலவிட திட்டமிட்டுள்ளது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.