- New Home Guarantee திட்டத்தில் மேலதிகமாக 10,000 இடங்கள் ஒதுக்கீடு. இத்திட்டத்தின் கீழ் முதல் வீடு வாங்க தகுதி பெறுபவர்கள் வங்கிகளில் கடன் பெற 5% வைப்பு பணம் மட்டுமே செலுத்தினால் போதுமானதாகும் மீதமுள்ள 15% வைப்பு பணத்திற்கு அரசாங்கம் உத்திரவாதம் அளிக்கும்.
- First Home Super Saver Scheme (FHSSS) திட்டத்தின் கீழ் முதல் வீடு வாங்குவதற்கான வைப்பு பணத்தை Superannuationனில் பங்களித்து சேமிக்கும் தொகையின் அளவு 50,000 டாலர்களாக உயத்தப்படுகிறது. இத்திட்டம் ஜூலை 2022ல் நடைமுறைக்கு வர உள்ளது.
- Family Home Guarantee திட்டத்தின் கீழ் தகுதி பெறும் single parents இரண்டு சதவீத வைப்பு நிதியுடன் முதல் வீடு வாங்க முடியும்.
- கட்டமைப்பு செயற்த்திட்டத்திற்கென அடுத்த 10 ஆண்டுகளில் செலவு செய்ய கூடுதலாக 15.2 பில்லியன் டாலர்கள் நிதி ஒதுக்கீடு.
- இந்த புதிய நிதியினை கொண்டு பாதுகாப்பான சாலைகளை உருவாக்குதல், பயணம் செய்யும் நேரத்தை குறைத்தல் மற்றும் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குதல்.
- இப்புதிய 15.2 பில்லியன் டாலர்கள் அனைத்து மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்களுக்கு பிரித்து வழங்கப்படும்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.