- கொரோனா பரவல் காரணமாக சர்வதேச எல்லைகள் குறைந்தது அடுத்த ஆண்டு நடுப்பகுதி வரை மூடப்பட்டிருக்கும் என்பதினால் ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்வோரின் எண்ணிக்கை இறங்கு முகமாகவே இருக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
- கடந்த நிதிநிலை அறிக்கையில் புதிய குடிவரவாளர்களின் எண்ணிக்கை 2020-2021ம் ஆண்டில் 72 ஆயிரத்தால் குறைவடையும் என கணிக்கப்பட்டிருந்த நிலையில் அது தற்போது 97 ஆயிரத்தால் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- சர்வதேச எல்லைகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளதினால் 2021-2022 நிதியாண்டிலும் புதிய குடிவரவாளர்களின் எண்ணிக்கை மேலும் 77 ஆயிரத்தால் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- 2024-25 ஆண்டளவில் இந்த எண்ணிக்கை படிப்படியாக 230,000 என்ற அளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தொடரும் கொரொனா பேரிடரினால் நிலவும் நிச்சயமற்ற நிலையினால் இந்த எண்ணிக்கை மாறுபடலாம்.
- Humanitarian visa program-மனிதாபிமான அடிப்படையில் உள்வங்கப்படும் அகதிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு நிர்ணயித்தது போல 13,750மாகவே தொடர உள்ளது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.