Federal Budget 2021: Other: Women, Security, Environment, Energy, Defence
பெண்களின் உடல் மற்றும் உளநலம் தொடர்பாக நிதிநிலை அறிக்கையில் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அரசு இதற்காக 354 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கியுள்ளது.
பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் (cervical cancer மற்றும் மார்பக புற்றுநோய் (breast cancer) பரிசோதனை திட்டங்களை மேம்படுத்துவதற்காக அரசு 100 மில்லியன் டாலர்களை ஒதுக்கியுள்ளது. இதனால் 40 வயது முதல் 74 வயதுவரையான பெண்கள் மேமோகிராம் (mammogram service) சேவையை இலவசமாக பெறலாம். முன்பு இந்த சேவை 50 முதல் 74 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே இருந்தது. இனி 40 வயது முதல் பெண்கள் இந்த இலவச சேவையைப் பெறலாம்.
கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் புதிய தாய்மார்களுக்கான மனஅழுத்தம் (depression) தொடர்பான சேவைகளுக்கு 47 மில்லியனுக்கும் அதிகமான தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.
ஐ.வி.எஃப் முறையில் கருத்தரிப்பு செய்யும்போது கருக்களை பாரவையிடும் பரிசோதனைக்கு சுமார் 100 மில்லியன் டாலர் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் Eating Disorder என்று அழைக்கப்படும் சாப்பாடு தொடர்பான அல்லது உணவு தொடர்பான மனநோய் சிகிச்சை திட்டங்களுக்கு அரசு 27 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.