Federal Budget 2021: Taxes
வரி செலுத்துவோருக்கான சலுகை சலுகை கடந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது. இந்த வரிச் சலுகை இந்த ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் தேதியுடன் முடிவதாக இருந்தது. ஆனால் இது 2022 ஜூன் என்று அடுத்த ஆண்டுவரை தொடரவுள்ளது. இந்த வரிச் சலுகை மூலம் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் ஈட்ட்டும் சுமார் ஒரு கோடி மக்கள் பயனடைவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
$ 37,000 அல்லது அதற்கும் குறைவாக வருமானமிருந்தால் வரிச்சலுகை - $ 225
$ 37,001 முதல் $ 48,000 வருமானமிருந்தால் வரிச்சலுகை - $ 255 மற்றும் $37,000க்கு மேல் உள்ள ஒவ்வொரு டாலருக்கும் 7.5 சென்ட் வரிச்சலுகை. ஆனால் மொத்த வரிச் சலுகை அதிகபட்சமாக $1,080 வரை இருக்கும்.
$ 48,001 முதல் $ 90,000 வருமானமிருந்தால் வரிச்சலுகை $ 1,080 வரை இருக்கும்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.