பாதுகாப்பு படைக்கு ஒதுக்கப்பட்டுள்ள சுமார் $575பில்லியன் நிதியில் கிட்டத்தட்ட பாதி பாதுகாப்பு படையின் பலத்தை அதிகரிக்க வழங்கப்படவுள்ளது.
- சுமார் 18,500 புதிய பணியாளர்கள் நியமனத்திற்கு $38 பில்லியன்
- போர் கப்பல்களுக்கு $50 பில்லியன்
- கடற்படை உட்கட்டமைப்புக்காக $10 பில்லியன்
மேலும் $137 மில்லியன் கடல்சார் கண்காணிப்பு மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றிச் வரும் படகுகளைத் தடுக்கும் எல்லைப் படையின் பணிகளுக்கு வழங்கப்படுகிறது
நாட்டின் கடல்சார் நலன்களைப் பாதுகாக்க $75 மில்லியன் கூடுதலாகப் பாதுகாப்புப் படைக்கு வழங்கப்படும்
அடுத்த நிதியாண்டில் மத்திய கிழக்கில் நடந்து வரும் நடவடிக்கைகளுக்காக சுமார் 10 மில்லியன் டாலர்களுக்கு மேல் ஒதுக்கப்படுகிறது
REDSPICE செயற்திட்டம் மூலம் இணைய பாதுகாப்புக்கு $10 பில்லியனாக நிதி உயர்த்தப்படுகிறது
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
