SKIP TO MAIN CONTENT

2022 நிதிநிலை அறிக்கை: வீடு வாங்குபவர்களுக்கு கூடுதல் உதவி திட்டம்

ஆஸ்திரேலியாவின் 2022-23ம் ஆண்டுக்குரிய நிதிநிலை அறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் வீட்டுவசதி தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ள விபரங்கள் வருமாறு:

A ’SOLD’ sign is seen outside an apartment block in Canberra
A ’SOLD’ sign is seen outside an apartment block in Canberra Source: AAP Image/Lukas Coch

1 min read

Published

Updated


Skip to article content

அதிகரித்து வரும் வீட்டு விலை ஒரு முக்கிய பிரச்சனையாக மாறிவருவத்தினால் கூடுதல் மக்கள் வீட்டுச் சந்தையில் நுழைவதற்கு உதவுவதற்காக அரசாங்கம் அதன் வீட்டு உத்தரவாதத் திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளது.

இது திட்டத்தின் மூலம் வீடு வாங்குபவரின் வீட்டுக் கடனின் ஒரு பகுதி அரசாங்கத்தால் உத்தரவாதம் அளிக்கப்படும். ஆகவே ஒரு சிறிய வைப்புத்தொகையுடன் விரைவில் ஒரு வீட்டை வாங்க இது உதவி புரியும்.

  • First Home Guarantee திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் தற்போது 10,000 மாக உள்ள அரசு வழங்கி வரும் உத்தரவாதங்கள் ஜூலை 1 முதல் 35,000மாக உயர்த்தப்படும். இதன் மூலம் 5 சதவீத வைப்பு நிதியுடன் முதலாவது வீடு வாங்குபவர்கள் வீடு வாங்க முடியும்.
  • Regional Home Guarantee திட்டத்தின் கீழ் பிராந்திய பகுதிகளில் வீடுகள் வாங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் அக்டோபர் 1, 2022 முதல் ஜூன் 30, 2025 வரை 10,000 அரச உத்தரவாதங்கள் வழங்கப்படும்.
  • Family Home Guarantee திட்டத்தின் கீழ் ஜூலை 1, 2022 முதல் ஜூன் 30, 2025 வரை Single Parentஆக உள்ளவர்கள் குறைந்த வைப்பு நிதியாக 2 சதவீதத்துடன் வீடு வாங்க உதவும் பொருட்டு அரசு ஆண்டுதோறும் 5,000 உத்தரவாதங்கள் வழங்கும் .

நாட்டில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திற்கும் பிரதேசத்திற்கும் அரசாங்கத்தால் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள குறிப்பிட்ட விலை வழிகாட்டியின் கீழ் உள்ள வீடுகளுக்கு மட்டுமே இந்தத் திட்டங்களை பயன்படுத்த முடியும்.

 

 

 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now