உயர்த்து வரும் வாழ்க்கை செலவுகளை சமாளிக்க $420 மதிப்புள்ள கூடுதல் வரிச் சலுகை ஒருமுறை வழங்கப்பட உள்ளது.
ஆண்டுக்கு $126,000க்கும் குறைவான வருமானம் ஈட்டும் ஆஸ்திரேலியர்களுக்கு தற்போது $255 முதல் $1080 வரை வழங்கப்பட்டு வரும் வரிச்சலுகை ஜூலை முதலாம் தேதி முதல் $675 முதல் $1,500 வரை உயர்த்தப்படுகிறது. இந்த வரிச் சலுகை மூலம் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் ஈட்டும் சுமார் ஒரு கோடி மக்கள் பயனடைவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் நலன்புரி பெறுபவர்களுக்கு அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவை சமாளிக்க தனித்தனியாக $250 வழங்கப்படும். இதன் மூலம் 6 மில்லியன் மக்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மார்ச் 2022 இல் வருமான ஆதரவு கொடுப்பனவுகள் 2.1 சதவீதம் அதிகரித்து, கிட்டத்தட்ட 5 மில்லியன் ஆஸ்திரேலியர்கள் பயனடைந்தனர். முதியோர் ஓய்வூதியம், ஊனமுற்றோர் ஆதரவு ஓய்வூதியம் மற்றும் பராமரிப்பாளர் கொடுப்பனவு விகிதங்கள் தனி நபர் ஒருவருக்கு பதினைந்து நாட்களுக்கு $20 மற்றும் தம்பதியினருக்கு $30 அதிகரித்தது. செப்டம்பரில் மீண்டும் இதேபோன்ற அதிகரிப்பைப் பெறுவார்கள். அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவில் இருந்து மக்களைக் காக்க உதவுவதற்காக கொடுப்பனவுகள் தொடர்ந்து அதிகரிக்கப்படுவதாக கூறப்படுகிறது .
அதிகரித்து காணப்படும் பெட்ரோல் விலையை குறைக்கும் பொருட்டு எரிபொருள் வரி 50 சதவீதம் குறைக்கப்படும். ஆனால் இது தற்காலிகமாக 6 மாதங்கள் நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
சிறு வணிகங்கள் தங்கள் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க செலவழிக்கும் ஒவ்வொரு $100க்கும், $120 வரி விலக்கு கிடைக்கும்
கூடுதலாக, இன்றிரவு முதல் சிறு வணிகங்களுக்கு , cloud computing, e-invoicing, cybersecurity மற்றும் web design போன்ற டிஜிட்டல் பொருளாதார தொழில்நுட்பங்களில் செலவழிக்கும் ஒவ்வொரு $100க்கும் $120 வரி விலக்கு கிடைக்கும்.
இதன் மூலம் ஆண்டிற்கு $100,000 வரையிலான முதலீடுகள் ஆதரிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர இந்த நிதிநிலை அறிக்கையில் $1.3 பில்லியன் ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
