SKIP TO MAIN CONTENT

அகதிகளுக்கான மருத்துவ உதவிச்சட்டத்திற்கு சாதகமாக நீதிமன்றம் தீர்ப்பு!

The island of Nauru.
The island of Nauru. Source: Getty Images

1 min read

Published

Updated


Skip to article content

ஆஸ்திரேலியாவிற்கு வெளியே தங்கவைக்கப்பட்டுள்ள புகலிடக் கோரிகையாளர்களுக்கு ஆஸ்திரேலியாவில் மருத்துவ உதவி வழங்க வழி செய்யும் "medevac" என்று அழைக்கப்படும் சட்டத்தின் ஒரு பகுதியை நீக்க வேண்டும் என்ற அரசின் மேன்முறையீட்டை Federal Court ஏகமனதாக தள்ளுபடி செய்துள்ளது.

நவுறுவிலிருக்கும் அகதி அல்லது புகலிடம் கோருவோர் நோய்வாய்ப்பட்டிருந்தால் அவர்கள் ஆஸ்திரேலிய மருத்துவர்களுடன் தொலைபேசியில் கலந்தாலோசித்த பின்னரே ஆஸ்திரேலியாவுக்கு சிகிச்சைக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்று அரசு வாதிட்டது.

ஆனால் நோய்வாய்ப்பட்டவர்களின் மருத்துவ அறிக்கைகளைவைத்தே அவர்களை ஆஸ்திரேலியாவுக்கு சிகிச்சைக்குக் கொண்டுவர அரசு அனுமதிக்கலாம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்நிலையில் குறித்த சட்டத்தை மீளப்பெறுவதற்கு முயற்சிப்பதன் மூலம் அரசாங்கம் அகதிகளுக்கு எதிராக கொடூரமாக நடந்துகொள்கிறது என்று அரசுக்கு எதிராக இந்த மேன்முறையீட்டு வழக்கில் வாதாடிய The Human Rights Law Centre-இன் David Burke கூறினார்.

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now