SKIP TO MAIN CONTENT

அரசு வழங்கும் 'கோவிட் கொடுப்பனவு': நாளை முதல் புதிய மாற்றம்!

finances, 2022, money issues
Ito ang ilan sa mga payong pampinansyal sa 2022 mula sa May PERAan financial experts Source: AAP

2 min read

Published

Updated

Presented by Renuka


Skip to article content

கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வழங்கும் Pandemic Leave Disaster Payment  தொடர்பில் நாளை திங்கட்கிழமை முதல் புதிய நடைமுறையொன்று அறிமுகமாகிறது.

இதுவரை காலமும் PCR சோதனை மூலம் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுவந்த அரச கொடுப்பனவு, நாளை முதல் antigen சோதனை மூலம் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட் தொற்று ஏற்பட்டிருப்பதை உறுதி செய்த ஒருவர், தன்னை 7 நாட்களுக்கு தனிமைப்படுத்திக்கொண்டதால், அல்லது தொற்றுக்கண்டவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததன் காரணமாக தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டதால், அல்லது கோவிட் தொற்று ஏற்பட்டவரைப் பராமரிக்கவேண்டிய தேவையேற்றட்டதால், 20 மணி நேரத்துக்கு மேல் வேலைக்குச் சமூகமளிக்க முடியாவிட்டால், குறிப்பிட்ட நபர் அரச உதவு தொகையாக 750 டொலர்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என குறிப்பிடப்படுகிறது. 

இந்த உதவுதொகை நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்பதுடன், இக்கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ள விரும்புகிறவர்கள், Services Australia இணையத்தில் இதற்கான விண்ணப்பத்தைத் தாக்கல் செய்யவேண்டும். 

Pandemic Leave Disaster Payment பெறுவதற்கான நிபந்தனைகள் உட்பட மேலதிக விவரங்களை Services Australia இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now