இந்தியாவில் சிக்கித் தவிக்கும் மெல்பன் குடியிருப்பாளர் Gary Newman என்பவர், 14 நாட்களுக்கு மேல் இந்தியாவில் தங்கியிருந்ததால், அங்கிருந்து நாடு திரும்புவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அதனை எதிர்த்து, 73 வயதான அவர் அரசின் மேல் வழக்குத் தொடுத்திருந்தார். அரசின் தடை உத்தரவு அவரது தனியுரிமை மீறல் என்று அவரது வழக்குரைஞர்கள் இன்று நீதிமன்றத்தில் வாதாடினார்கள்.
ஆனால், தேசிய நலனைப் பாதுகாக்கவேண்டிய தேவை ஏற்பட்டால், அத்தகைய தனி உரிமைகள் மீறப்படலாம் என்று அரச வழக்குரைஞர்கள் நீதிமன்றத்தில் வாதிட்டார்கள்.
அரசுக்கு அந்த உரிமை இருக்கிறது என்று நீதிபதி கூறியுள்ளார்.
இருந்தாலும், அரசியலமைப்பில் சில அம்சங்களுடன் இந்த தடை உத்தரவு ஒத்துப் போகவில்லை என்ற வாதத்துடன் வழக்கு தொடரவுள்ளது.
இந்த வழக்கு இன்னும் முடிவடையவில்லை.
இதே வேளை, இந்தியாவிலிருந்து சில விமானங்கள் நாட்டுக்கு வர இந்த வார இறுதியிலிருந்து ஆரம்பிக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
Share
