SKIP TO MAIN CONTENT

மற்றுமொருதொகுதி அகதிகள் அமெரிக்கா புறப்படுகின்றனர்!

A supplied image of a refugee looking out to the sea on Manus Island.
50 refugees held in offshore detention camps on Manus Island and Nauru are leaving for the US. (AAP) Source: AAP

1 min read

Published

Updated

Presented by Renuka



Skip to article content

அமெரிக்கா- ஆஸ்திரேலியா இடையே செய்துகொள்ளப்பட்ட அகதிகள் ஒப்பந்தத்தின்படி, நவுறு மற்றும் மனுஸ் தடுப்பு முகாமிலுள்ள மற்றுமொரு தொகுதி அகதிகள் அமெரிக்கா புறப்பட்டுச் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுமார் 50 பேருக்கு அமெரிக்கா செல்வதற்கான அனுமதி இன்று காலை வழங்கப்பட்டதையடுத்து, அவர்கள் அடுத்துவரும் நாட்களில் அமெரிக்கா புறப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருநாடுகளுக்கிடையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்கீழ், இதுவரை மனுஸிலிருந்து 85 பேரும் நவுறு தடுப்பு முகாமிலிருந்து 145 பேருமாக, மொத்தம் 230 பேர் அமெரிக்காவில் குடியர்த்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அமெரிக்கா செல்லும் அகதிகள், அமெரிக்காவின் வெவ்வேறு பகுதிகளில் குடியமர்த்தப்பட்டு, முதல் 3 மாதங்களுக்கு அடிப்படை வசதிகள் அனைத்தும் வழங்கப்படும் அதேநேரம், ஒரு வருடத்தின் பின் அவர்கள் அங்கு நிரந்தர வதிவிட உரிமை பெறுவதற்குத் தகுதி பெறுவர். பின் 5 வருடங்கள் கழித்து அமெரிக்க குடியுரிமை பெறமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now