Sam Rowley என்ற நிழற்படக் கலைஞர் எடுத்த, "சுரங்கப்பாதைச் சண்டை" (“Subway Squabble”) என்ற தலைப்பில் வெளியான நிழற்படம், Natural History Museum in London என்ற அருங்காட்சியகம் வழங்கும் Wildlife Photographer of the Year's People Choice Award விருதை வென்றுள்ளது.
இந்தப் போட்டிக்குச் சமர்ப்பிக்கப்பட்ட 48,000 நிழற்படங்களில், 25 நிழற்படங்கள் இறுதிச் சுற்றுக்குத் தேர்வாயின. இரண்டாவதாக மதிப்பிடப்பட்ட நிழற்படத்தை விட இருபத்தெட்டாயிரம் வாக்குகளுக்கும் அதிகமாகப் பெற்று Sam Rowley எடுத்த நிழற்படம் வெற்றி பெற்றுள்ளது.
தனது வெற்றி குறித்து, “ப்பூ !!! என்ன ஒரு காலைப் பொழுது. இந்த ஆண்டின் மக்கள் தேர்வு விருதின் வன விலங்கு புகைப்படக் கலைஞராக நான் தேர்வானதைக் கேட்டு மகிழ்ச்சியடைகிறேன்! கனவு நனவானது” என்று tweet செய்துள்ளார் Sam Rowley.
