கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் toilet paper வாங்குவதற்காக மக்கள் முண்டியடித்துக்கொண்டிருந்த நாட்கள் கடந்துபோய், தற்போது rapid antigen சோதனை உபகரணங்களை வாங்குவதற்கென தேடியலைகின்றனர்.
இப்படியானவர்களுக்கு உதவவென மெல்பனைச் சேர்ந்த Matt என்ற software developer ஒரு தேடுதளத்தை வடிவமைத்துள்ளார்.
FindaRAT.com.au என்ற இத்தேடுதளத்தின் மூலம் rapid antigen test kits எங்கே விற்பனைக்கு உள்ளது? எங்கே குறைந்தளவு கையிருப்பு உள்ளது? எங்கே விற்றுத் தீர்ந்துவிட்டது என்ற விவரங்களைப் பெற்றுக்கொள்ளமுடியும் என தெரிவிக்கப்படுகிறது.

The 'Find a Rat' site helps Australians search for rapid antigen tests near them. Source: FindaRat.com.au
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.