SKIP TO MAIN CONTENT

முதல் நாள்: ஆஸ்திரேலிய மருத்துவர்களின் செயற்பாட்டால் உந்தப்பட்ட சுஜிதா, இன்று இருதய மருத்துவ நிபுணர்

1991 ஆம் ஆண்டு, தனது குடும்பத்தாருடன் சுஜிதா தவபாலச்சந்திரன் ஆஸ்திரேலியாவிற்குக் குடிவந்தபோது, அவருக்கு ஏழு வயது. ஆஸ்திரேலியர்கள் தம்மை அன்போடு வரவேற்றார்கள் என்ற பசுமையான நினைவு இன்றும் நிலைத்திருக்கிறது என்கிறார் சுஜிதா.

Sujitha Thauapalachandraus
Sujitha Thauapalachandraus Source: Ashley Mar

1 min read

Published

Updated

By Kulasegaram Sanchayan



Skip to article content

புதிய நாடு, புதிய நண்பர்கள், புதிய பள்ளி, என்ற பய உணர்வு ஒருபுறம் இருந்தாலும், ஆஸ்திரேலிய சமூகத்தில், ஒரு நாள் கூட தான் தனிமைப்படுத்தப்பட்டதாக உணரவில்லை என்கிறார் சுஜிதா.

இருபது ஆண்டுகளுக்கு முன்னர் சுஜிதாவின் பாட்டனார் ஆஸ்திரேலியாவிற்கு வந்திருந்தபோது, ஒரு அதிர்ச்சிதரும் நிகழ்வு நடந்துள்ளது.  சுஜிதாவின் பேரன்பையும் மதிப்பையும் பெற்றிருந்த பாட்டனாருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.  அவரது இருதயத்தின் மூன்று இடங்களில் அடைப்பு இருப்பதாக வைத்தியர்கள் கூறியதை சுஜிதாவால் தாங்க முடியவில்லை.

ஆனால், ஆஸ்திரேலிய மருத்துவர்கள் அவசர அறுவை சிகிச்சை செய்து அவரது உயிரைக் காப்பாற்றிவிட்டார்கள்.

அந்த மருத்துவர்களின் செய்பாட்டால் உந்தப்பட்ட சுஜிதா, இன்று இருதய மருத்துவ நிபுணராகி, வெஸ்ட்மீட் மருத்துவமனையில் கடமையாற்றுகிறார்.

Sujitha and her family
Sujitha and her family Source: Provided by Sujitha Thauapalachandraus

தனது குடும்பத்தினருடன் சுஜிதா

"ஆஸ்திரேலிய சமூகத்தில், ஒரு நாள் கூட தான் தனிமைப்படுத்தப்பட்டதாக உணரவில்லை"

#FirstDaySBS
Sujitha, in Australian school uniform
Sujitha, in Australian school uniform Source: Provided by Sujitha Thauapalachandraus

ஆஸ்திரேலிய பள்ளி சீருடையில் சுஜிதா

Sujitha with her parents and siblings
Sujitha with her parents and siblings Source: Provided by Sujitha Thauapalachandraus

அவரது பெற்றோர் மற்றும் உடன்பிறப்புகளுடன் சுஜிதா

இன்று இருதய மருத்துவ நிபுணராகி, வெஸ்ட்மீட் மருத்துவமனையில் கடமையாற்றுகிறார் சுஜிதா. ImageSBS வானொலி கலையகத்தில் சுஜிதா Image
SBS வானொலி கலையகத்தில், குலசேகரம் சஞ்சயனுடன் நேர்காணல். #FirstDaySBS

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now