ஃபைசர் தடுப்பூசி போட்டதால் ஏற்பட்ட முதல் மரணம்?

நியூசிலாந்து நாட்டில் ஃபைசர் தடுப்பூசி போட்டுக் கொண்ட ஒரு பெண், தடுப்பூசி போட்ட சில நாட்களில் மரணமடைந்துள்ளார். கோவிட்-19 தடுப்பூசிகளில் ஃபைசர் தடுப்பூசியுடன் தொடர்பு படுத்தப்பட்ட முதல் இறப்பு இதுவாகும்.

A health care worker prepares a syringe with the Pfizer vaccine on the opening day of a COVID-19 mass vaccination clinic in Perth

A health care worker prepares a syringe with the Pfizer vaccine on the opening day of a COVID-19 mass vaccination clinic in Perth Source: AAP

நியூசிலாந்து நாட்டில் ஃபைசர் தடுப்பூசி போட்டுக் கொண்ட ஒரு பெண் மரணித்துள்ளார்.  பெண்ணின் வயது மற்றும் தடுப்பூசி போட முன் அவரது நிலமை குறித்த முழு விவரங்கள் வெளியாகவில்லை.

இதய தசையில் அழர்ச்சி ஏற்பட்டதால் உண்டான மாரடைப்பு காரணமாக அந்தப் பெண் இறந்திருக்கலாம் என்று ஒரு சுயாதீன, தடுப்பூசி பாதுகாப்பு கண்காணிப்பு வாரியம், கூறியுள்ளது.

AstraZeneca தடுப்பூசி போட்டுக் கொண்ட சிலருக்கு இரத்த உறைவு ஏற்பட்டு சிலசமயம் மரணம் ஏற்படலாம் என்ற ஒரே காரணத்திற்காக AstraZeneca தடுப்பூசி போடுவதற்கு மக்கள் தயக்கம் காட்டும் சூழலில், ஃபைசர் தடுப்பூசி போட்ட ஒருவருக்கு மரணம் ஏற்பட்டது என்ற செய்தி வெளியாகியுள்ளது.

இந்தப் பெண்ணின் மரணம் குறித்து மேலும் விசாரணை நடத்தப்பட்டு, மரண விசாரணை அதிகாரி தீர்ப்பளிக்க உள்ளார்.

ஃபைசர் மற்றும் Moderna தடுப்பூசிகள் மிகவும் அரிதான பக்க விளைவுகளைத் தோற்றுவிக்கின்றன என்று ஐரோப்பிய மருந்துகள் முகமை (European Medicines Agency) கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Cases1
Source: NEJM
Cases2
Source: NEJM

இருந்தாலும், எந்த ஒரு தடுப்பூசியும் போட்டுக் கொள்ளாத ஒருவருக்கு கொரோனா வைரஸ் Covid-19 தொற்று ஏற்பட்டால் வரும் விளைவுகள் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு வரும் பாதகமான விளைவுகளை விட மிக அதிகம் என்று சுட்டிக்காட்டியுள்ளது New England Journal of Medicine என்ற முக்கிய மருத்துவ ஏடு சொல்கிறது.


தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்

தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:

NSW பயணம் குறித்த தரவுகள்  மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

VIC பயணம் குறித்த தரவுகள்வெளி நாட்டுப் பயணம் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

ACT பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

NT பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

QLD பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

SA பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

TAS பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

WA பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

ஆஸ்திரேலியர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள அதேநேரம் வெளிநாடு செல்ல வேண்டுமெனில் விதிவிலக்கு அனுமதி பெறவேண்டும். இது குறித்த மேலதிக விபரங்களுக்கு covid19.homeaffairs.gov.au/leaving-australia என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள்  Smart Traveller இணையத்தளத்தில் வெளியாகும்.


 

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


 

NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:

COVID-19 Vaccination Glossary
Appointment Reminder Tool.


Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

NSW 

Victoria 

Queensland 

South Australia 

ACT 

Western Australia 

Tasmania

Northern Territory 


மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:

NSW 

Victoria 

Queensland 

South Australia 

ACT 

Western Australia 

Tasmania
Northern Territory


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

 


3 min read

Published

By Kulasegaram Sanchayan



Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now